வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் தான் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்போம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகாரை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் தான் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்போம். ஒவ்வொரு நாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை மத்திய அரசு உணரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியதாவது: அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்கள் பின்னால் நிற்பவர்களிடம் விவாதிப்போம் எனக் கூறினார்.