வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 6ம் வகுப்பு முதல் நாளை மறுநாள்(ஜூன் 12) திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து தேர்வுகளை எழுதுவதில் சோர்வு அடைவதாலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை. கட்டாயம் பொதுத்தேர்வு நடக்கும். பொதுத்தேர்வு ரத்து செய்வதாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.