வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய இந்தியா உருவாகி வருவதை, நடுத்தர வருவாய் பிரிவினர் தங்களின் கடின உழைப்பால் உணர்த்தி வருகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பு மூலம் அவர்கள் உணர்த்துகின்றனர்.
நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிகளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.