சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்
சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்

சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பேருந்தில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜி என்பவருக்கும் பேருந்து நடத்துனர் மோகன் என்பவருக்கும் சில்லறை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ் தனது குடும்பத்தினருடன் பேருந்து நிறுத்தத்தில்
Brutal assault on conductor in retail dispute  சில்லறை தகராறில் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பேருந்தில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜி என்பவருக்கும் பேருந்து நடத்துனர் மோகன் என்பவருக்கும் சில்லறை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ் தனது குடும்பத்தினருடன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.


பேருந்து கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சீர்காழி வரும் பொழுது ராஜ் அவரது ஆதரவாளர்களுடன் சேத்தூர் அருகே மண்ணிபள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களுடன் பேருந்து முன்புறம் நிறுத்தி பேருந்தை மறித்து உள்ளே ஏறி நடத்துனர் மோகனை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை கீழே இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து காயமடைந்த நடத்துனர் மோகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பேருந்து நிர்வாகம் சார்பில் மணல்மேடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது நடத்துனரை பலர் சேர்ந்து தாக்கும் கொடூர தாக்குதல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

Raa - Chennai,இந்தியா
12-ஜூன்-202312:20:16 IST Report Abuse
Raa பஸ் டிக்கெட் வாங்க, gPay போர்டு வைத்து சிம்பிளா முடிக்கலமே
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202312:31:50 IST Report Abuse
ranjani பஸ்ஸின் உள்ள தகராறில் யார் சரி யார் தப்பு என்று கூற இந்த பதிவை இடவில்லை. ஆனால் 10 பேரை வரவழைத்து என்பது திட்டமிட்ட வன்முறை. இது நசுக்கப்பட வேண்டியது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஜூன்-202321:07:23 IST Report Abuse
Ramesh Sargam அரசு வாகனம், தனியார் வாகனம் என்று எல்லா வாகனங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தினால், இது போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்த வேண்டும். நான் சில இடங்களில் பார்த்தேன், தெருவில் பிச்சை (யாசகம்) செய்பவர்களே Google Pay, Phone Pe scanner -களை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும்போது, பேருந்து நடத்துபவர்கள் ஏன் அந்த முறையை அறிமுகம் செய்யக்கூடாது. யோசியங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X