சென்னை: துணைவேந்தர்கள் நியமனத்திற்கு கால நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு: பல்கலை துணைவேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என்பது குறித்து கால நிர்ணயம் செய்து தமிழக பல்கலை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, கடந்தாண்டு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.