லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லண்டன் ஓவலில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸி.,469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி.,அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
4ம் நாள் ஆட்டம் துவங்கியதும், உமேஷ் வேகத்தில் லபுசேன் 41 ரன்களுக்கும், ஜடேஜா பந்துவீச்சில் கிரீன் 25 ரன்னிலும் அவுட்டானார்கள். ,2வது இன்னிங்சில் ஆஸி., அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து 443 ரன் முன்னிலை பெற்றபோது டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி வெற்றிபெற 444 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.அதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன் சேர்த்தது. கோஹ்லி 44 ரன்களுடனும் ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 5 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 280 ரன் தேவை.