வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் ஒசாமா பின்லாடன் போல் தாடி வளர்த்து வருகிறார். ஒருவர் தாடி வளர்ப்பதால் நாட்டின் பிரதமராகி விட முடியாது என பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளார்.
பீஹாரின் அராரியா என்ற இடத்தில் நடந்த பேரணியில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ஒசாமா பின்லாடன் போல் தாடி வளர்த்து வருவதுடன், பிரதமர் மோடி போல் ஆகிவிடலாம் என நினைத்து கொண்டு உள்ளார். ஒருவர் தாடி வளர்ப்பதால் பிரதமராகி விட முடியாது.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அவரையே பிரதமர் எனக்கூறி வருகிறார். உண்மையில் அவர் தான் பிரதமரா?. இவ்வாறு அவர் பேசினார்.