வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து. விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் 45 நிமிடங்களுக்கு பிறகு தரையிறங்கின.
ஆண்டுதோறும் அதிக மழை பொழிவாக, தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று மாலை சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, அசோக் நகர், கே.கே நகர், பம்மல், நங்கநல்லூர், மடிப்பாக்கம், கூடுவாஞ்சேரி , ஈக்காட்டு தாங்கல், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
![]()
|
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மாலையில் பெய்த மழை சென்னைவாசிகளை குளிர்வித்தாலும், சாலையில் வாகனங்களி்ல் பயணிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
விமானங்கள் தாமதம்
சென்னையில் திடீரென சூரைகாற்றுடன் மழை பெய்ததால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் 45 நிமிடங்களுக்கு பிறகு தரையிறங்கின.