வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த இளைஞர், பாதயாத்திரையாக 8 ஆயிரத்து 640 கி.மீ., பயணித்து ' மெக்கா' சென்றடைந்தார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தைச்சேர்ந்தவர் ஷிஹாப் சோத்தூர் 29, இவர் கடந்த 2022 ஜூன் 2ஆம் தேதி மெக்காவை நோக்கி நடை பயணத்தை துவக்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக நடந்து சென்று, இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியான வாகாவில் உள்ள அஃபியா பள்ளியில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்.
![]()
|
பின்னர் பாகிஸ்தான் வழியாகத் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா வழியாக பயணித்து ஹஜ்ஜின் எல்லையை கடந்தார். மொத்தம் 370 நாட்கள் பாதயாத்திரயைாகவே 8 ஆயிரத்து 640 கி.மீ. பயணித்து மெக்கா சென்றடைந்தார். அங்கு, தனது அன்னைக்காக காத்திருக்கும் ஷிஹாப், அவருடன் சேர்ந்து மெக்காவில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த உள்ளார்.