விஜயபுரா-முதியவர் ஒருவர், ஐந்தாவது முதுகலை பட்டப்படிப்பு தேர்வு எழுதி, மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கினார்.
பாகல்கோட், இளகல்லின், குடூர் அருகில் உள்ள, எஸ்.சி.ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நிங்கய்யா, 81. அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், படிப்பில் ஆர்வம் காண்பித்தார்.
நிங்கப்பா ஏற்கனவே, கர்நாடக பல்கலைக்கழகத்தில், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், எம்.ஏ., ஆங்கிலம் இறுதி ஆண்டு தேர்வு எழுதி உள்ளார். இது நிங்கய்யா எழுதும், ஐந்தாவது முதுகலை பட்டப்படிப்பு தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயபுரா நகரில் உள்ள, பி.எல்.டி.இ., நர்சிங் கல்லூரியில், தேர்வு எழுதி வருகிறார். இவருக்கு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவரது படிப்பு ஆர்வத்துக்கு, மனைவியின் ஊக்கமே காரணம் என்கிறார்.