நாகர்கோவில்: கேரள மாநிலம், கோட்டயம் கலெக்டராக மதுரையைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., விக்னேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டயம் கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கேரள சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த விக்னேஷ்வரி நியமிக்கப்பட்டார். இவர், இம்மாவட்டத்தின் 48வது கலெக்டர். கடந்த 2015 கேரளா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான விக்னேஷ்வரி, மதுரை எஸ்.எஸ்., காலனியைச் சேர்ந்தவர்.
தந்தை வெள்ளைச்சாமி, தாய் சாந்தி. கணவர் உமேஷ் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கோட்டயத்தின் பக்கத்து மாவட்டமான எர்ணாகுளம் கலெக்டராக உள்ளார்.