தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்
தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்

தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்

Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம். தருமபுரம் ஆதினகர்த்தர் திருஆபரணங்கள் அணிந்து, சிவிகை பல்லக்கில் மேளதாளம் வாத்தியம், சிவ கைலாய வாத்தியம் கரகாட்டம், ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் ஆதீன வீதிகளில் வீதி உலா. பக்தர்கள் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்து அருளாசி பெற்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்
Pattanapravesa festival in Dharumapuram Atheena Thirumadam  தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம். தருமபுரம் ஆதினகர்த்தர் திருஆபரணங்கள் அணிந்து, சிவிகை பல்லக்கில் மேளதாளம் வாத்தியம், சிவ கைலாய வாத்தியம் கரகாட்டம், ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் ஆதீன வீதிகளில் வீதி உலா. பக்தர்கள் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்து அருளாசி பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் குரு முதல்வரின் குருவான கமலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா மற்றும் தருமபுரம் ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேச விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழாவில் மனிதனே மனிதனை சுமந்து செல்வது மனித உரிமை மீறல் என்று கூறி திராவிடர் விடுதலைக் கழகம் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழர் உரிமை இயக்கம் தமிழர் தேசிய முன்னணி தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் காவல்துறை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில் இரவு பட்டண பிரவேச விழா கோலாகலமாக தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தங்க ருத்ராட்சை திருஆபாரணங்கள் பூண்டு, தங்க கொறடு பாதரட்சை அணிந்து, ஆதினத் தம்பிரான்கள் மற்றும் திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர, மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள், முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.

ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார்.

பட்டணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். வீதியுலா முடிவடைந்து ஆதீன

குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் ஆதீனகர்த்தர் எழுந்தருளி பாவனாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் நாகை மாவட்டங்களை சேர்ந்த 360க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-ஜூன்-202303:25:35 IST Report Abuse
வெகுளி விழாவில் பிரசாதம் வழங்குவதாக அறிவித்திருந்தால் மானமிகு ஓசிச்சோறும் கலந்துக்கிட்டிருப்பாரே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X