பல்லடம்:பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, குப்பிச்சிபாளையத்தில், கருப்பராயன் கன்னிமார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னதாக, 8ம் தேதி கோ பூஜை, விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அதன்பின், முளைப்பாலிகை எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல், முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜை, சுவாமி சிலைகள் கண் திறத்தல் நடந்தன.
நேற்று முன்தினம் காலை, 6.00 மணிக்கு தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையில், கருப்பராய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.