கால்நடை மருத்துவ படிப்பு;  வரும் 12 முதல் விண்ணப்பம்
கால்நடை மருத்துவ படிப்பு; வரும் 12 முதல் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பு; வரும் 12 முதல் விண்ணப்பம்

Added : ஜூன் 11, 2023 | |
Advertisement
சென்னை: 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.இந்த கல்லுாரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட, 'பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்' என்ற கால்நடை
 12th application for veterinary course   கால்நடை மருத்துவ படிப்பு;  வரும் 12 முதல் விண்ணப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.

இந்த கல்லுாரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட, 'பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்' என்ற கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு, 660 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 63 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள, 597 இடங்கள் மாநிலஒதுக்கீட்டில் உள்ளன.

அதேபோல், பால்வள, கோழியின உற்பத்தி, உணவு தொழில்நுட்ப படிப்புகளுக்கு 140 இடங்கள் உள்ளன. இவற்றில், ஆறு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. மீதமுள்ள, 134 இடங்கள் மாநிலஒதுக்கீட்டில் உள்ளன.

இந்த மாநில ஒதுக்கீட்டிற்கான, பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு 2023 - 24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12ம் தேதி காலை 10:00 மணி முதல் 30ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும், இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X