சென்னை : தமிழகம் முழுதும் நடந்த, 'லோக் அதாலத்' தில், 3,949 வழக்குகளில், 131.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்கு, அறிவுசார் சொத்துஉரிமை வழக்குகளில் தீர்வு காண, மக்கள் நீதிமன்றம் எனப்படும், 'லோக் அதாலத்' நடத்த, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு நிர்வாக தலைவரான நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டனர்.
அதன்படி, மாவட்ட மற்றும் தாலுகா அளவில், 149 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி, கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வுகள்.
மதுரை கிளையில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வு நீதிபதி ஆனந்தி ஆகியோர் தலைமையில் மூன்று அமர்வுகள், வழக்குகளை விசாரித்தன.
தமிழகம் முழுதும் நடந்த லோக் அதாலத்தில், 3,949 வழக்குகளில், 131.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நஷிர் அகமது, இந்த தகவலை தெரிவித்துஉள்ளார்.