சிவகங்கை: ''தமிழகத்தில், கள்ளச்சாராயம் எங்கும் கிடையாது. அது தொடர்பாக மிகைப்படுத்தி பேசப்படுகிறது,'' என, சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, 'தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க, கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும்' என, தெரிவித்துஉள்ளார்.
கள்ளுக் கடைகளை திறப்பதற்கு சாத்தியமில்லை; இது அரசின் கொள்கை முடிவு. இன்று கள்ளுக்கடைகளை திறக்கச் சொல்வர்; நாளை சாராயக்கடைகளை திறக்கச் சொல்வர்.
டாஸ்மாக் மதுக்கடை வருவாய், அரசுக்கு அத்தியாவசியமாக உள்ளது. கள்ளுக்கடைகளை திறக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.