வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போத்தனுார்: ''கவர்னர், மாநில ஆட்சியை கண்காணிக்கக் கூடியவர்; அறிவாலயத்தில் வேலை பார்ப்பவரல்ல,'' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவை, குனியமுத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், மது கொள்முதல் துவங்கி, விற்பனை வரை, ஊழல் நடக்கிறது. போக்குவரத்து வாடகை தொகை ஏற்றப்பட்டுள்ளது. 'எலைட்' கடைகளுக்கான மாத வாடகை, 50 ஆயிரத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாட்டில் வாங்குதல், பெட்டி கொள்முதல் என, பல வகையிலும், 1 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.
மொத்தம் உள்ள 19 மதுபான தொழிற்சாலைகளில், 15 ஆலைகள், தி.மு.க.,வினருக்கு சொந்தமானவை. கோவையில், 200 மதுக்கடைகள், எண்கள் இன்றி செயல்படுகின்றன.
தமிழகத்தில் இரண்டாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வரும் நிலையில், இக்கட்டண உயர்வை, அரசே ஏற்க வேண்டும்.
![]()
|
மின் துறையில் நடக்கும் ஊழலை தடுத்தாலே நஷ்டமின்றி மின் வாரியத்தை நடத்த முடியும். தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
கவர்னர் தன் பணியை செய்கிறார். மாநில அரசின் பணிகளை கண்காணிப்பது, ஆலோசனை வழங்குவது அவரது பணி; அவர் அறிவாலயத்தில் பணி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.