மத்திய அரசு ஒதுக்கும் நிதி திரும்ப செல்கிறது!  கருத்தரங்கில் தி.மு.க., - எம்.பி., 'பளீச்'
மத்திய அரசு ஒதுக்கும் நிதி திரும்ப செல்கிறது! கருத்தரங்கில் தி.மு.க., - எம்.பி., 'பளீச்'

மத்திய அரசு ஒதுக்கும் நிதி திரும்ப செல்கிறது! கருத்தரங்கில் தி.மு.க., - எம்.பி., 'பளீச்'

Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
பொள்ளாச்சி: ''வேளாண் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி, பயன்படுத்தப்படாமல் திரும்ப செல்லும் நிலை உள்ளது,'' என, பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் வெளிப்படையாக பேசினார்.வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம், மகாலிங்கம்
 The funds allocated by the central government go back! DMK, MP, Bleech at the seminar   மத்திய அரசு ஒதுக்கும் நிதி திரும்ப செல்கிறது!  கருத்தரங்கில் தி.மு.க., - எம்.பி., 'பளீச்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


பொள்ளாச்சி: ''வேளாண் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி, பயன்படுத்தப்படாமல் திரும்ப செல்லும் நிலை உள்ளது,'' என, பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் வெளிப்படையாக பேசினார்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.


இதில், பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது:


உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கில், நிர்வாகம், வாய்ப்புகள், அரசுத்துறை மானியம், உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கப்படுகிறது.


latest tamil news

முதலில் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்ததாக, 'ஜாப் கார்டு' என வரவு, செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும். தரமான நாற்றுகள் தயாரித்து வினியோகிக்க வேண்டும்.

மத்திய அரசு வேளாண்துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், வேளாண் துறைக்கு ஒதுக்கும் நிதி, பயன்படுத்தப்படாமல் திரும்ப செல்லும் நிலை உள்ளது.

நன்றாக செயல்படும் நிறுவனங்களுக்கு பரிசளிக்கவும், மந்தமாக செயல்படும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கோவை கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:


ஒரே மாதிரியான பயிர்களை பல ஆண்டுகளாக சாகுபடி செய்வதால், மண் வளம் பாதிக்கப்பட்டு, பல்வேறு விதமான நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. மண் வளத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

இந்தாண்டு சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. சிறுதானியங்கள் தேவை அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கும். இதற்கான, 'பிராண்ட்' பெயர் உருவாக்க வேண்டும்.

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற, கூட்டாக இணைந்து விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். அரசு கொடுக்கும் உதவி, நலத்திட்டங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெற வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தும் போது, மற்றவர்கள் தயாரிப்பை காட்சிப்படுத்துவதால் புதிய சிந்தனைகள் தோன்றும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

r.sundaram - tirunelveli,இந்தியா
11-ஜூன்-202313:16:17 IST Report Abuse
r.sundaram அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் இல்லை என்றால் பாமர விவசாயிகளுக்கு விழிப்புணர்வு எப்படி இருக்கும்? தமிழ் நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்குவது இல்லை என்று குற்றம் மட்டும் சொல்ல தெரியும். ஒதுக்கிய நிதியை ஒழுங்காக செலவு செய்ய தெரியாது. எங்கேபோய் முட்டிக்கொள்வது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11-ஜூன்-202313:03:41 IST Report Abuse
Ramesh Sargam திரும்ப செல்வது எவ்வளவோ மேல். அப்படி செய்யாமல், நாங்கள் மத்திய அரசின் நிதியை இதற்கு பயன்படுத்திவிட்டோம் என்று கூறி மொத்தமாக ஆட்டை போடாமல் இருந்தார்களே அதுவரைக்கும் நாம் சந்தோஷப்படவேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
11-ஜூன்-202313:01:00 IST Report Abuse
M  Ramachandran தலமைய்ய அமைச்சருக்கு திரமயினமை காரணமாகவும் உட்கட்சி பூசல் குடும்ப பிரச்னைய்ய ஆகிவைகளில் கவனம் செலுத்துவதால் இது போனற பிரச்னைய்யகள் இராண்டாம் பட்சமாக நினைக்கிறார்கள் . ஆனால் இது தான் மக்கள் பிரச்சனிய்ய என்று முன்னுரிமை கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X