கார்கே - சித்தராமையா லடாய்
கார்கே - சித்தராமையா லடாய்

கார்கே - சித்தராமையா லடாய்

Added : ஜூன் 11, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டாலும், உள்ளுக்குள் பல பிரச்னைகள் குடைச்சல் தந்து வருகின்றன. மாநில முதல்வர் சித்தராமையாவிற்கும், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அறவே ஆகாது. சிவகுமாரைத் தான் முதல்வராக்க வேண்டும் என கார்கே ஆசைப்பட்டார். ஆனால், காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் கட்சியின் பொதுச்செயலர்
Garke - - Siddaramaiah Ladai  கார்கே - சித்தராமையா லடாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டாலும், உள்ளுக்குள் பல பிரச்னைகள் குடைச்சல் தந்து வருகின்றன. மாநில முதல்வர் சித்தராமையாவிற்கும், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அறவே ஆகாது.

சிவகுமாரைத் தான் முதல்வராக்க வேண்டும் என கார்கே ஆசைப்பட்டார். ஆனால், காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா, சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். இதனால், சிவகுமார் துணை முதல்வராகிவிட்டார்.

துணை முதல்வர் என்பதற்கு பதிலாக, கூடுதல் முதல்வர் என பதவியின் பெயரை மாற்றிவிடலாம் என்றும் சிவகுமாருக்கு ஆதரவாக கார்கே பேசிப் பார்த்தார். ஆனால், இதை சில சட்ட வல்லுனர்களும், மேலிடமும் ஒத்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, கட்சி மேலிடம் மீது சித்தராமையா கோபத்தில் உள்ளார். காரணம், சட்டசபை தேர்தல் சமயத்தில் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை மூத்த தலைவர்கள் அறிவித்தது தான்.

கர்நாடக பட்ஜெட்டை ஒன்பது முறை தாக்கல் செய்தவர் சித்தராமையா. இதனால், அவருக்கு மாநிலத்தின் நிதி நிலை பற்றி அவருக்கு நன்கு தெரியும். இந்நிலையில், இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அவர் பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.

கஜானாவையே காலி செய்யும் இந்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, அது அறிவிக்கப்படும் வரை சித்தராமையாவிற்கு தெரியாதாம். பிரியங்கா இவற்றை பிரசார கூட்டத்தில் அறிவித்த போது அதிர்ச்சியடைந்தாராம் சித்தராமையா. இதைப் பற்றி, கட்சி மேலிடம் எங்கள் தலைவரிடம் விவாதித்திருக்கலாம் என பொருமுகின்றனர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (16)

11-ஜூன்-202321:08:32 IST Report Abuse
குமரி குருவி காங்கிரஸ் என்றாலே முட்டல்மோதல் அடி தடி சகஜம் தானே..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-ஜூன்-202315:15:13 IST Report Abuse
duruvasar அவங்களே அடிச்சிட்டு செத்துடுவானுங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11-ஜூன்-202314:24:17 IST Report Abuse
Ramesh Sargam 'லடாய்' என்பது தமிழ் வார்த்தை இல்லையே? ஏன் வேறு ஒரு மொழியை திணிக்கப்பார்க்கிறீர்கள் என்று திமுகவினர் மற்றும் அவர்களின் அல்லக்கை கட்சிகள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
11-ஜூன்-202317:36:21 IST Report Abuse
பெரிய குத்தூசிடுமிழர்கள் லடாய் ஹிந்தி வார்த்தையை போன்று தினசரி சுமார் 200 ஹிந்தி வார்த்தைகளுக்கு மேல் டுமிழர்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்துகின்றனர் என்பது திராவிட, டுமீல் போராளிகளுக்கு தெரியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X