கமுதி : கமுதி அருகே கருங்குளம் ஓட்டுச்சாவடியில் அதிக வாக்காளர்கள் நின்றதால் டோக்கன் வழங்கபட்டு, மாலை 5:30 மணி வரை ஓட்டு பதிவு நடந்தது. மேலும் இப்பகுதியில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு போலீசார் குவிக்கபட்டதால், மோதல் தவிர்க்கபட்டது. கருங்குளத்தில் ஏற்கனவே வேட்புமனு பரிசீலனை செய்து, இறுதி பட்டியல் வெளியிட்டபோது, இருதரப்பினர் மோதி கொண்டதில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதன் தொடர்ச்சியாக தேர்தலின்போது மீண்டும் மோதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக கருங்குளம் ஓட்டுச்சாவடியில் ஓட்டு பதிவு முடிந்தபின் தாக்குதல் சம்பவம் நடக்கும் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் கருங்குளம் ஓட்டு சாவடியில் மதியத்திற்கு மேல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். மாலை 5 மணிக்கு ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். ஓட்டு சாவடி அலுவலர் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கினார். இதனால் ஓட்டுப்பதிவு மாலை 5:30 மணி வரை நடந்தது. இதன் பின்னரும் ஓட்டுச்சாவடி அருகே கும்பல் திரண்டிருந்தது. போலீசார் எச்சரிக்கை செய்ததை அடுத்து கலைந்து சென்றனர். கமுதி அருகே அரியமங்கலத்தை சேர்ந்த முத்துமணி, 35. அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் முனியசாமியின் உறவினர். இவருக்கும் தி.மு.க., வை சேர்ந்த காட்டுராஜா, தி.மு.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தூர்பாண்டி, ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும் தேர்தல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தி.மு.க., வினர், முத்துமணியை கம்பால் தாக்கியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். கோவிலாங்குளம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE