சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டுகளை திருடிய போஸ்ட் மாஸ்டர் கைது

Added : அக் 19, 2011
Share
Advertisement
திட்டக்குடி : தொழுதூரில் தபாலில் வந்த ஓட்டுகளை திருடி, நண்பர்களிடம் கொடுத்த போஸ்ட் மாஸ்டர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 45; தொழுதூர் போஸ்ட் ஆபீஸ், போஸ்ட் மாஸ்டர். மங்களூர் ஒன்றியத்தில், கடந்த 17ம் தேதி ஓட்டுச்சாவடியில் பணிபுரிந்த அலுவலர்கள், தபால் மூலம் தங்களது ஓட்டுக்களை அனுப்பினர். நேற்று வரை ஓட்டுகள்

திட்டக்குடி : தொழுதூரில் தபாலில் வந்த ஓட்டுகளை திருடி, நண்பர்களிடம் கொடுத்த போஸ்ட் மாஸ்டர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 45; தொழுதூர் போஸ்ட் ஆபீஸ், போஸ்ட் மாஸ்டர். மங்களூர் ஒன்றியத்தில், கடந்த 17ம் தேதி ஓட்டுச்சாவடியில் பணிபுரிந்த அலுவலர்கள், தபால் மூலம் தங்களது ஓட்டுக்களை அனுப்பினர்.

நேற்று வரை ஓட்டுகள் வந்து சேராததால், அதே பகுதியைச் சேர்ந்த ராணி, சத்திய ராஜேஸ்வரன், பூங்கோதை ஆகியோர் இதுபற்றி விசாரித்தனர். இதில், போஸ்ட் மாஸ்டர் தமிழ்ச்செல்வன், தபாலில் வந்த ஓட்டுகளை உரியவர்களிடம் சேர்க்காமல், திருடி முறைகேடாக வேறு சிலரிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் வழக்கு பதிந்து போஸ்ட் மாஸ்டர் தமிழ்ச்செல்வனை கைது செய்து, அவருக்கு உடந்தையாக இருந்த செல்வராஜ், சேகர் ஆகியோரைத் தேடி வருகிறார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X