புதுடில்லி : எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, உலகளவில் ஏழாவது பெரிய வங்கியாக உருவெடுத்து உள்ளது.
நேற்று பங்குச் சந்தைகளில் இந்நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து, சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, அதாவது, கிட்டத்தட்ட 12.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
இதன் காரணமாக, இவ்வங்கி உலகின் ஏழாவது மிகப் பெரிய வங்கியாக உயர்ந்துள்ளது.மேலும், புகழ்பெற்ற 'மார்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சாக்ஸ், பேங்க் ஆப் சீனா' போன்ற நிறுவனங்களை விட அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகி உள்ளது.
தற்போது உலகளவில் மிகப் பெரிய வங்கியாக ஜே.பி., மார்கன் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் பேங்க் ஆப் அமெரிக்கா, சீனாவின் ஐ.சி.பி.சி., ஆகியவை உள்ளன.
எச்.டி.எப்.சி., வங்கியுடன் அதன் தாய் நிறுவனமான எச்.டி.எப்.சி., இணைந்த பிறகு, ஒருங்கிணைந்த நிறுவனத்தின் பங்குகள், நேற்று முதன் முறையாக சந்தையில் வர்த்தகம் ஆனது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய வர்த்தகத்தில் எச்.டி.எப்.சி., வங்கி பங்கு விலை உயர்வைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில், சந்தை மதிப்பின் படி, முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்., நிறுவனமும் உள்ளது.
'மார்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சாக்ஸ், பேங்க் ஆப் சீனா' போன்ற நிறுவனங்களை விட அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகி உயர்ந்துள்ளது