முபாரக் மீதான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு

Added : அக் 31, 2011 | |
Advertisement
கெய்ரோ:எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு, இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.எகிப்தில், கடந்த பிப்ரவரியில் முபாரக்கிற்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது, ராணுவ வன்முறை நிகழ்ந்தது குறித்து, முபாரக், அவரது மகன்கள் அலா மற்றும் கமால் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்த விசாரணை, கெய்ரோவில் உள்ள

கெய்ரோ:எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு, இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.எகிப்தில், கடந்த பிப்ரவரியில் முபாரக்கிற்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது, ராணுவ வன்முறை நிகழ்ந்தது குறித்து, முபாரக், அவரது மகன்கள் அலா மற்றும் கமால் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



இதுகுறித்த விசாரணை, கெய்ரோவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரபாத் தலைமையிலான குழுவை மாற்றியமைக்க வேண்டும் என, வாதிகள் தரப்பில் அப்பீல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால், முபாரக் மீதான விசாரணை டிசம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X