சென்னை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, எளிமையாக கடன் வழங்கும் நோக்கில் 'டிஜிட்டல்' தளத்தை தமிழ்நாடுமெர்கன்டைல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, 'ஜோகாட்டா' தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் வாயிலாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, ஆன்லைன் வாயிலாக விரைவாகவும், எளிமையாகவும் கடன் வழங்க முடியும்.
வங்கி செயல்பாடுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு 36 சதவீதமாக உள்ளது. அவர்களுக்கான வங்கி சேவையை டிஜிட்டல்மயமாக்குவதில், வங்கி உறுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.