மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி.,யை  தற்காலிகமாக நிறுத்த முடியுமா?
மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி.,யை தற்காலிகமாக நிறுத்த முடியுமா?

மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி.,யை தற்காலிகமாக நிறுத்த முடியுமா?

Added : செப் 04, 2023 | |
Advertisement
வங்கியில் வைப்பு நிதிக்கு, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு உள்ளது என்பதை, தங்கள் வாயிலாக அறிந்தேன். இருப்பினும், அதே கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்டவர் இருப்பின், அது 20 லட்சம் ரூபாய் வரை பயனளிக்கும் என்று கூறப்படுவதை பற்றி விளக்கவும். பி.பாலசந்தர், கீழ்ப்பாக்கம், சென்னை.உண்மை தான். பல்வேறு விதமாக நீங்கள் வைப்பு நிதி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தனித்து ஒரு வைப்பு நிதி
 Can mutual bundle SIP be stopped temporarily?   மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி.,யை  தற்காலிகமாக நிறுத்த முடியுமா?


வங்கியில் வைப்பு நிதிக்கு, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு உள்ளது என்பதை, தங்கள் வாயிலாக அறிந்தேன். இருப்பினும், அதே கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்டவர் இருப்பின், அது 20 லட்சம் ரூபாய் வரை பயனளிக்கும் என்று கூறப்படுவதை பற்றி விளக்கவும். பி.பாலசந்தர், கீழ்ப்பாக்கம், சென்னை.உண்மை தான். பல்வேறு விதமாக நீங்கள் வைப்பு நிதி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தனித்து ஒரு வைப்பு நிதி வைத்துக் கொள்ளலாம். உங்கள் மனைவி ஒரு வைப்பு நிதி போடலாம்.

நீங்கள் முதல் நபராகவும், உங்கள் மனைவி இணை முதலீட்டாளராகவும் கொண்டு ஒரு வைப்பு நிதி; இதே உறவை புரட்டிப் போட்டு இன்னொரு வைப்பு நிதி; உங்கள் மைனர் மகனுக்கோ, மகளுக்கோ கார்டியனாக இன்னொரு வைப்பு நிதி; நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்றால், அதன் இயக்குனராக ஒரு வைப்பு நிதி; அதன் பங்குதாரராக இன்னொரு வைப்பு நிதி என்று, விதம் விதமாக வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இது இரண்டு பேர் கொண்டஅக்கவுன்டுக்கு, மூன்று பேர் கொண்ட ஜாயின்ட் அக்கவுன்ட் பற்றி யோசித்துப் பாருங்கள். அதில் எவ்வளவு பர்முடேஷன், காம்பினேஷன் போடலாம்? இவை அனைத்துமே தனித்தனியே 5 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் காப்பீடு பெறும்.

ஓர் அதீத கணக்குப் புலி போட்டுக் கொடுத்த கணக்கு ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். 65 லட்சம் ரூபாய் வரை கூட, வைப்பு நிதியை பத்திரப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.


வருமான வரி தாக்கலை, 75 வயதை அடைந்தவர்கள் சமர்ப்பிக்க வேண்டாம் என்பது அமலுக்கு வந்துவிட்டதா? என்.வைகை வளவன், ஆனையூர், மதுரை.வந்துவிட்டதே! ஒருசில குறிப்பிட்ட வரையறைகளுக்குள் இருந்தால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். அதாவது, 75 வயதோ, அதற்கு மேலோ ஆகியிருக்க வேண்டும். கடந்த ஆண்டில் அவர்கள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அந்த நபருக்கு ஓய்வூதியமும், வட்டியும் மட்டும் தான்வருவாயாக இருக்க வேண்டும்.

அவர் ஓய்வூதியம் பெறும் வங்கியிலேயே முதலீட்டுக்கான வட்டி வருவாயும் பெற வேண்டும். இத்தகைய வங்கி, ஷெட்யூல் வங்கி எனப்படும் எந்தப் பொதுத் துறை வங்கியாகவும் இருக்கலாம். அப்படி இருக்குமானால், அந்த வங்கியில் அவர் 'டிக்ளரேஷன்' தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வங்கி உரிய டி.டி.எஸ்., பிடித்தம் செய்யும். அதுவே போதுமானது; வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டாம்.


மியூச்சுவல் பண்டில், எஸ்.ஐ.பி.,யை தற்காலிக பொருளாதார கஷ்டத்தால் சில மாதங்களுக்கு நிறுத்த முடியுமா? கோ.கிஷோர், அய்யப்பன்தாங்கல், சென்னை.தாராளமாக நிறுத்த முடியும். பண்டு நிறுவனங்கள் இதற்காக எந்த அபராதமும் வசூலிப்பதில்லை. மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை கூட எஸ்.ஐ.பி.,யை நிறுத்தி வைக்கலாம். இப்போது இதற்கான வசதிகள் அந்தந்த மியூச்சுவல் பண்டு வலைதளங்களிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் அதில், 'லாக் இன்' செய்து, எந்த மாதத்தில் இருந்து நிறுத்த வேண்டும்; எப்போது மீண்டும் துவங்க வேண்டும்என்றெல்லாம் பதிவேற்றலாம்.


நானும், என் மனைவியும் வெளிநாட்டிலுள்ள மகள் வீட்டுக்கு சென்று வர உள்ளோம். நாங்கள் அயல் நாட்டில் இருக்கும் சமயத்தில், மருத்துவ காப்பீடு அவசியமா? அப்படி அவசியமெனில், தற்போது இந்தியாவில் இருக்கும் மருத்துவ காப்பீடு போதுமானதா? இல்லையெனில், குறுகிய மருத்துவ காப்பீடு இந்தியாவில் இருந்து எடுக்க முடியுமா? கா.கெஜராஜ், குரோம்பேட்டை, சென்னை.மருத்துவ காப்பீடு இல்லாமல் வெளிநாடு பயணம் பற்றி நினைக்கவே வேண்டாம். மருத்துவ விஷயத்தில் நம்ம நாடு தங்கம், வைரம், வைடூரியம். அதுவும், நாடெங்கும் இலவச மருத்துவமனைகள் வாயிலாக நம் மத்திய, மாநில அரசுகள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகின்றன.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவமனை, மருந்து செலவுகள் மிகவும் அதிகம். நம் நாட்டில் நீங்கள் எடுத்திருக்கும்இன்ஷூரன்ஸ் அங்கே பயன்படாது.

'டிராவல் இன்ஷூரன்ஸ்' என்று ஒன்று எடுக்கச் சொல்வர். உங்கள் பயணம், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நாட்கள், மாதங்களுக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது தான் இந்த டிராவல்இன்ஷூரன்ஸ்.

பல பெரிய வங்கிகளும்,இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் டிராவல் இன்ஷூரன்சை வழங்குகின்றன.

ஆனால், இவை எதுவும் அந்த நாடுகளில் ஒரு சுக்குக்கும் பிரயோஜனப்படாது.

உங்கள் மகளையே அங்கேயுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து, உங்கள் இருவருக்கும்இன்ஷூரன்ஸ் எடுக்கச்சொல்லுங்கள்.

நம்ம ஊர் மருந்து சீட்டு அந்த நாடுகளில் செல்லவே செல்லாது. முடிந்தால், சாதாரண சளி, ஜூரம், தலைவலி, உடம்பு வலிக்குக் கூட மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்!


நாமினி, வாரிசுதாரர் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ரா.ரோஸ்மேரி, அருப்புக்கோட்டை, விருதுநகர்இரண்டுமே இரு வேறு தகுதிகள். வாரிசாக இருப்பவர் நாமினியாக நியமிக்கப்படலாம். ஆனால், நாமினியாக இருப்பவர் வாரிசாக இருக்க வேண்டியதில்லை. நாமினியாக இருப்பவர் 'கஸ்டோடியன்' எனப்படும் காப்புப் பொறுப்பாளர் தான்.

ஒருவேளை சொத்து அல்லது முதலீடுகளுக்கு உரியவர் மரணம் அடைந்துவிட்டால், அவற்றை நாமினி கோர முடியும். ஆனால், அவர் அவற்றுக்கான தற்காலிக பொறுப்பாளர் மட்டுமே.

சட்ட ரீதியாக, மறைந்தவருடைய உயில் படி யார் வாரிசுதாரரோ, அவருக்கு அந்தச் சொத்தையோ, முதலீடுகளையோ, நாமினி மாற்றிக் கொடுத்துவிட வேண்டும். வாரிசுதாரர்கள் ஒருவரோ, ஒன்றுக்குமேற்பட்டவர்களோ இருக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X