நெல்லையில் குண்டுவெடிப்பு : மாணவன் காயம்| Blast in Nellai : one injured | Dinamalar

நெல்லையில் குண்டுவெடிப்பு : மாணவன் காயம்

Added : நவ 03, 2011 | |
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத். இவர், அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத். இவர், அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது, அது திடீரென்று வெடித்தது. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X