நில அபகரிப்பு வழக்கில் பஸ் அதிபர் கைது

Added : நவ 03, 2011 | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, தனியார் பஸ் அதிபர் நேற்று கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலதாஸ். இவரின் மனைவி மேரி ஜெனிதா,65. இவர்களுக்கு, தஞ்சை மாவட்டம் புளியந்தோப்பு கிராமத்தில், 3.44 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, போலி கிரைய ஒப்பந்தம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, தனியார் பஸ் அதிபர் நேற்று கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலதாஸ். இவரின் மனைவி மேரி ஜெனிதா,65. இவர்களுக்கு, தஞ்சை மாவட்டம் புளியந்தோப்பு கிராமத்தில், 3.44 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, போலி கிரைய ஒப்பந்தம் செய்து அபகரித்து விட்டதாக, மேரி ஜெனிதா, தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில், கடந்த செப்டம்பர் மாதம் புகார் செய்தார். இந்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., அனில்குமார் கிரி உத்தரவிட்டார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேரி ஜெனிதாவுக்கு சொந்தமான நிலத்தை, சிலர் போலி ஆவணம் தயாரித்து, அபகரிப்பு செய்தது தெரியவந்தது. அதன்படி, தஞ்சாவூர் மகர்நோம்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன்,54, மாப்பிள்ளைநாயக்கன் பட்டியைச் சேர்ந்த லியோ சார்லஸ்,34, ஆகிய இரண்டு பேரை, தனிப்பிரிவு போலீசார், ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய, தஞ்சாவூர் கீழவாசல் கொள்ளுப்பேட்டையை சேர்ந்த பஸ் அதிபர் பப்பி தியாகராஜனை, போலீசார் தேடி வந்தனர். அவரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று தியாகராஜனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X