ரஷ்யாவின் போர் விமானங்களைஆய்வு செய்த வட கொரிய அதிபர்
ரஷ்யாவின் போர் விமானங்களைஆய்வு செய்த வட கொரிய அதிபர்

ரஷ்யாவின் போர் விமானங்களைஆய்வு செய்த வட கொரிய அதிபர்

Added : செப் 17, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சியோல் :ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அணுகுண்டுகளை வீசக்கூடிய விமானங்கள் மற்றும் போர் விமானங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கிழக்காசிய நாடான வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 13ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், இரு தரப்பு உறவுகள்
North Korea and Russia : North Korean president Kim Jong Un inspects Russian fighter jets    ரஷ்யாவின் போர் விமானங்களைஆய்வு செய்த வட கொரிய அதிபர்


சியோல் :ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அணுகுண்டுகளை வீசக்கூடிய விமானங்கள் மற்றும் போர் விமானங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிழக்காசிய நாடான வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 13ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து, விளாடிமிர் புடினுடன், கிம் ஜாங் உன் நீண்ட நேரம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை, நேற்று முன்தினம் வட கொரிய
அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

இந்நிலையில் நேற்று, கடலோர நகரமான விளாடிவோஸ்டாக்கிற்கு அருகே உள்ள விமான நிலையத்துக்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சென்றார். அவரை, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, ரஷ்யாவின் அணுசக்தி திறனுடைய குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்களை, கிம் ஜாங் உன்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விமானங்களின் சிறப்பம்சங்கள் குறித்து, ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு விளக்கினார். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கடற்படை கப்பல்களை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். கிம் ஜாங் உன்னின் இந்த பயணத்தின் வாயிலாக, ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க உள்ளதும்,
ரஷ்யாவின் தொழில்நுட்பத்தை வட கொரிய பயன்படுத்த இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

jagan - Chennai,இலங்கை
19-செப்-202301:36:50 IST Report Abuse
jagan பிச்சைக்காரர்கள் மாநாடு ஹா ஹா ஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X