ஆசைப்பட்டு பார்… இந்த பூமியும் நம் காலடியில் கிடக்கும் என்று சொல்வதுண்டு. மதுரை காளவாசலில் உள்ள கோவை ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சருக்கு சென்றால் ஆசை அற்றவர்கள் கூட பொருட்களின் மீது காதல் வசப்படுவர்.
பிரீமியர், லக் ஷரி, பட்ஜெட் என மூன்று பிரிவுகளில் 20 ஆயிரம் சதுரஅடியில் மூன்று தளங்களுடன் பர்னிச்சர்களுக்கான உலகம் விரிந்து கிடக்கிறது. கோவையில் இரண்டு கிளை, திருப்பூரில் ஒன்று, மதுரையில் ஒரு கிளைகளுடன் செயல்படுகிறது கோவை ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்.
பர்னிச்சர்களுக்கான பொற்காலம் என்பது போல தற்போது 'ஆபர்' விலையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தள்ளுபடி அறிவித்துள்ளனர்.
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லெதர் சோபா செட் விலை லட்சத்தை தொட்டாலும் கண்ணை விட்டு பிரிய மறுக்கிறது. 3 பேர் உட்காரும் சோபாவின் ஓர இருக்கைகளில் கால் நீட்டி அமரும் 'ரெக்லைனர்' வசதி உள்ளது. 2 சிங்கிள் சோபாவில் 'ரெக்லைனர்' வசதியுடன் முன்னும் பின்னும் ஆடும் 'ராக்கிங்' வசதி உள்ளது. வீட்டின் வரவேற்பறையை கம்பீரமாக்கும் இதில் கையால் 'புஷ் பேக்' செய்யும் வசதி உள்ளது. மற்றொரு வகையில் மோட்டார் மூலம் ஸ்விட்ச் இயக்கும் வசதி உள்ளது. இதற்கு மின்வசதி தேவை.
4 சிங்கிள், ஒரு டபுள் சோபா, 2 சிங்கிளில் 'ரெக்லைனர்' வசதியுள்ள லெதர் சோபாக்களும் அழகான வடிவமைப்பை தருகிறது. 'எல்' வடிவத்தில் வரவேற்பறை இரு மூலைகளை இணைக்கும் சோபா செட்கள், உடன் இணைந்த திவான் செட், பேப்ரிக் மாடல் என ரூ.10 ஆயிரத்தில் துவங்கி ரூ.5 லட்சம் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வகைக்கு ஒன்றாக இல்லாமல் ஒவ்வொன்றிலும் நிறங்கள் கூடுதலாக இருப்பதால் வீட்டுச்சுவருக்கு ஏற்ற சோபாவை தேர்ந்தெடுத்து வாங்கமுடியும்.
கட்டில்களில் பர்மா தேக்கு, சீசம், ரப்பர் மரத்தால் தயாரிக்கப்பட்ட 'கிங், குயின் சைஸ்' மற்றும் ஒற்றை கட்டில்கள் ரூ.12ஆயிரத்தில் இருந்து ரூ.ஒன்றரை லட்சம் வரையில் கிடைக்கிறது. கண்ணை உறுத்தாமல் அழகிய டிசைன்கள் கட்டிலின் முகப்பை அலங்கரிக்கிறது. கட்டிலுக்கு ஏற்ற படி மெத்தைகளையும் இங்கேயே வாங்கலாம். ரப்பர் மர டைனிங் டேபிள்கள் 8 பேர், ஆறு பேர், நான்கு பேர் அமரும் வகையில் டேபிளின் மேல் பூக்கள், பழங்காலத்து மரக்கதவு, டைல்ஸ் மாடல்களில் அமைக்கப்பட்டு, சேர்களின் பின்புறமும் அதே டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
'வால் வென்ட்' எனப்படும் 'டிவி', ஸ்பீக்கர், நியூர் பேப்பர் வைக்கும் வசதி, கப்போர்ட் உடன் கூடிய அகன்ற மரத்தளம் ரூ.23ஆயிரத்தில் இருந்து கிடைக்கிறது. திருமணத்திற்கு செட் ஆக வாங்கும் வகையில் 'குயின் சைஸ்' கட்டில், மெத்தை, இரண்டு தலையணை, 3 கதவுடன் கூடிய 'வார்ட்ரோப்', 'டிரஸிங் டேபிள்', 4 பேர் சாப்பிடும் 'டைனிங் டேபிள்', சேர்கள், 3 பேர் உட்காரும் ஒரு ஷோபா, 2 சிங்கிள் ஷோபா அனைத்தும் சேர்ந்து ரூ.65ஆயிரத்திற்கு கிடைக்கிறது. எதை எடுப்பது எதை விடுப்பது என நிதானமாக அங்கேயே உட்கார்ந்து யோசித்து வாங்கலாம்.