இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..!
இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..!

இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..!

Added : செப் 17, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
தமிழ் திரை உலகில் தோற்றத்தாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொண்டவர் விஷால். நடிப்பை தாண்டி, நடிகர் சங்க செயல்பாடுகள், மிஷ்கினுடன் சண்டை, தேர்தலில் போட்டி என தன்னைத்தானே அவ்வப்போது பரபரப்பாக்கி கொள்வார். அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் விட்டு பேசியபோது...* மார்க் ஆண்டனி படத்தில் உங்களுக்கு இரட்டை வேடமா'டைம் டிராவல்' படம், கொஞ்சம் திரில்லர்
My father and mother will not see such a Vishal..!  இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..!

தமிழ் திரை உலகில் தோற்றத்தாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொண்டவர் விஷால். நடிப்பை தாண்டி, நடிகர் சங்க செயல்பாடுகள், மிஷ்கினுடன் சண்டை, தேர்தலில் போட்டி என தன்னைத்தானே அவ்வப்போது பரபரப்பாக்கி கொள்வார். அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் விட்டு பேசியபோது...

* மார்க் ஆண்டனி படத்தில் உங்களுக்கு இரட்டை வேடமா


'டைம் டிராவல்' படம், கொஞ்சம் திரில்லர் இருக்கும். முதல் முறையாக 2 வேடங்கள். அப்பா, பிள்ளை ரோலில் நடிக்கிறேன். அப்பா ஆண்டனி 1975 ஐ சார்ந்தவர்; மகன் மார்க் 1990 சார்ந்தவர். இந்த 2 பேர் எப்படி சேருவாங்க என்பது கதை. எஸ்.ஜே. சூர்யாவும் 2 ரோலில் நடிக்கிறார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏழு வருஷமாக என்னுடைய தேதிக்காக காத்திருந்தவர். என்னால அப்போ முடியல; ஆனா மார்க் ஆண்டனி படம் எனக்கு சரியா அமைந்தது. அதிக பொருட் செலவுல வினோத் தயாரித்த படம் இது. படத்துக்கு மேலும் பலமா எஸ்.ஜே. சூர்யா இருக்காரு.

* எஸ்.ஜே.சூர்யாவுக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு...


இந்த படத்துல எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சாரு; எனக்கு பிரச்னைன்னு பேசணும் என்றால் ஒரு போன் பண்ணனும்னா முதல் ஆளு எஸ்ஜே.சூர்யா தான். ஒரு வில்லன் வில்லனா மட்டும் தான் நடிக்க முடியும். ஆனா இவர் காமெடியும் சேர்த்து செய்வார்.
எப்படி கூத்து பட்டறையில் இருந்து 'செல்லமே' படம் நடிக்க வந்தேனோ அது போல இந்த படத்தில் சூர்யா கிட்ட இருந்து நடிப்பை இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் என்னை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

* உங்கள் சினிமா பயணத்தில் உங்களை பெரிதும் ஈர்த்தவர்கள்


ஒருவர் விஜய். இன்னொருவர் எஸ். ஜே. சூர்யா. நான் காலேஜ் படிக்கிற நேரத்தில் இருந்து விஜய்யை பார்த்துட்டு இருக்கேன்; அவருக்கு கிடைத்த விமர்சனம் வேறு எந்த நடிகருக்கு கிடைச்சிருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க; தாங்க முடியாது. ஆனால் அவர் அதை எல்லாம் தாண்டி படத்துக்கு படம் நின்னு ஜெயிக்கிறார்னா அவருக்கு கிடைத்த அனுபவம். அதே மாதிரி தான் எஸ்.ஜே.சூர்யாவும். பெரிய போராளி

* ஜெயிலர் படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் சுனில் உங்க படத்துல இருக்காரே


முதல் முறையா அவரோட நடிக்கிறேன். சுனில் செட்ல இருந்தா வேற லெவல் இருக்கும். நான், சுனில், எஸ்.ஜே. சூர்யா செட்ல இருந்தா இயக்குனருக்கு ரொம்ப கஷ்டம். வேலை பார்க்க முடியாது. சிரிச்சு ரகளை பண்ணுவோம்.

* நடிகர் சங்க கட்டடத்தின் இரும்பு துருப்பிடிச்சு தொங்குதே


எங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் பணி முழுமை அடையும் என்று நம்புறேன். ஒரு கட்டடம் கட்டுவது என்பது ஒரு கல்யாணம் பண்றதை விட கஷ்டமான வேலைன்னு நான் படிச்சிருக்கேன். தமிழ்நாட்டின் அடையாளமாக இந்த கட்டடத்தை பார்க்கணும்னு ஆசை. மறைந்த ஆன்மாக்கள் எல்லாரும் சேர்ந்து தீயவர்களை அனுப்பிவிட்டு நல்லவர்களை மட்டும் இப்ப சேர்த்துக் கொண்டிருக்கிறது அங்க.

* உங்களிடம் நல்ல மாற்றங்கள் நிறைய தெரிகிறதே எப்படி


எல்லாமே அனுபவம் தான். இங்கே மனதை திடப்படுத்தி கொண்டு நம்மை மாற்றம் செய்கிறது. லத்தி படத்தில் நான் அடிபட்டு கேரளாவில் மருத்துவம் பார்த்த போது என்னை பற்றி யோசித்தேன். இனிமே நம்ம வாழ்க்கையை எப்படி நடத்தணும்; லைப் ஸ்டைல் எப்படி கொண்டு போகணும்னு நினைத்து பார்த்தேன்.
முதலில் என் கோபத்தை அடக்கி ஒரு சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று எல்லா வகையிலும் என்னுள் கொண்டு வந்தேன். அது இன்று பெரும் அளவில் உதவியா இருக்கு. இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல. தரையில் தான் படுத்து துாங்குகிறேன். என் துணிகளை துவைத்து, காயவைத்து, ரொம்ப இயல்பான மனிதனா நான் வாழ்கிறேன். இதை மாற்றங்கள் என்று சொல்ல மாட்டேன் என்னை சிறந்த மனிதனாக ஆக்கியிருக்குன்னு சொல்வேன். கெட்டதை துாக்கிட்டு நல்லதை மட்டும் வைத்துக் கொள்கிறேன்.

* மிஷ்கின் கூட அடுத்து வேலை பார்க்க வாய்ப்பு இருக்கா


அவர் எப்பவுமே என் பட்டியல்ல சிறந்த இயக்குனர், நண்பர்கள் வரிசையில் இருக்கார். நடிகனாக சேரலாம். ஆனால் தயாரிப்பாளராக அவர் கூட இருக்க முடியாது. துப்பறிவாளன் 2 படத்தை பொறுத்தவரை, அதை அனாதை பிள்ளையா தத்து எடுத்து முடிக்க போறேன்.

* நடிகர்களுக்கு இப்ப ரொம்ப அதிகமா அரசியல் ஆர்வம் வந்திருக்கிறதே


அது அரசியல்வாதிகள் தவறு. அரசியல்வாதிகள் நடிகர்களாக ஆகும்போது ஏன் நடிகர்கள் அரசியல்வாதி ஆகக்கூடாது.

* எப்ப தான் உங்க கல்யாணம்


அதுக்கான நேரம், காலம் எல்லாம் வரும். அதுக்குள் ஒவ்வொருவரும் கற்பனை செய்து பரப்புறாங்க. அப்படி பேசுபவர்கள் எதுவா இருந்தாலும் என்னை கேளுங்க; யாரை லவ் பண்றேன் என நானே உங்களுக்கு சொல்வேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-செப்-202305:14:35 IST Report Abuse
NicoleThomson பிரபாஸ் கல்யாணம் முடிந்தவுடன் இவரோட கல்யாணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X