மும்பையில் பயணிக்கும் புதியவர்களுக்கு புழக்கத்தில் உள்ள ஹிந்தி வார்த்தைகளுக்கான அர்த்தத்தை மீம்ஸ் வாயிலாக மஹாராஷ்டிரா சுற்றுலாத்துறை வெளியிட்டது. இது இணையத்தில் வரவேற்பை பெற்றது.
ஹிந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு ஹிந்தி மொழி தினத்திற்கு, தேசிய ஒற்றுமையை ஹிந்தி மொழி தொடர்ந்து
வலுப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். ஹிந்தி மொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஹிந்தி மொழி தினத்தை முன்னிட்டு, மஹாராஷ்டிரா சுற்றுலாத்துறை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் பேச்சுவழக்கில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் என்ன பொருள் என்பதை மீம்ஸ்களாக பகிர்ந்திருந்தது. இது சமூகவலைதளத்தில் பலரது பாராட்டை பெற்றது.
சிப்கா டால் (Chipka daal) என்றால் ஒட்டுவது என நேரடியாக பொருள் கொள்ள
கூடாது. மும்பை பேச்சு வழக்கில் 'இது அவர்களை அடி' என அர்த்தமாம்.
கஜோர் (khajoor) என்றால் தேதி என்று நேரடியாக பொருள் கொள்ள கூடாது. மும்பை
பேச்சுவழக்கில் இது 'முட்டாள்' என அர்த்தமாம்.
![]()
|
ரவாஸ் (Rawas) என்றால், இந்திய சால்மன் மீனை குறிக்காது. இது 'ஒருவரை
அற்புதம் என பாராட்டுவது' என அர்த்தமாம்.
ஹிலா டால் (Hila daal) என்றால், அசையவில்லை என பொருள் கொள்ள கூடாது.
'திணற அடி' என அர்த்தமாம்.
![]()
|
மஹாராஷ்டிரா சுற்றுலாத்துறையின் அட்டகாசமான பதிவுக்கு நெட்டிசன் ஒருவர்,
'போலே தோ எக்டம் ஜாக்காஸ்' அதாவது 'அப்படி சொன்னால் அதிர்ச்சி அல்ல' என
பொருள் அல்ல. 'இது சூப்பர் பதிவு' என அதே பாணியில் வாழ்த்தி பதிவிட்டார். ஏராளமானோர் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளுக்கு பொருளை உணர்த்திய பதிவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement