இரவில் வெகுநேரம் கண்விழித்து, அதன் பிறகு தூங்குபவர்களை இரவு ஆந்தைகள்
என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக அவர்களின் உயிரியல் கடிகாரம்
மற்றவர்களை விட வேறுபட்டுக் காணப்படும். சிலர் அலுவலக நேர மாற்றம் அல்லது
பழக்கமின்மை காரணமாக தாமதமாக உறங்க செல்லலாம்.
இரவு நேரங்களில் அதிக
நேரம் விழித்திருப்பவர்கள் காலை உணவைத் தவிர்ப்பதுடன், நேரம் தவறிய உணவுப்
பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக அடிவயிற்றில் கொழுப்பு சேர்வது,
தொப்பை உருவாகுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதை தவிர இவர்களுக்கு இது டைப்
2 நீரிழிவு மற்றும் இதய நோய்களும் வர வாய்ப்புள்ளது.
நமது உடலில்
குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் உட்பட பல்வேறு உடலியல் செயல்முறைகளை
ஒழுங்குபடுத்தும் இயற்கையான சர்க்காடியன் ரிதம்(circadian rhythm) உள்ளது.
இரவு நேரங்களில் தொடர்ந்து அதிக நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு இந்த
அமைப்பு சீர்குலைந்து ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கும்.
மோசமான தூக்கம்
இரவில்
அதிக நேரம் விழித்திருப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. போதிய
தூக்கமின்மையால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு டைப்2 நீரிழிவு
குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
இரவு
நேரத்தில் அதிகம் விழிப்பவர்கள் நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. மாறாக
இரவு நேர சிற்றுண்டிகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதுபோன்ற
உணவுகளில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம்
உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால், எடை அதிகரிப்பதற்கும், நீரிழிவு
குறைபாட்டின் அபாயத்தை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
உடல் செயல்பாடு
இரவு
நேரத்தில் அதிகம் விழித்திருப்பவர்கள், தங்களின் உடற்செயல்பாடுகளை போதிய
அளவில் மேற்கொள்வதில்லை. குறிப்பாக காலை நேர உடற்பயிற்சி என்பது
தேவையற்றதாக கருதுகின்றனர். இதனால் டைப்2 நீரிழிவு குறைப்பாடுக்கான ஆபத்தை
விளைவிக்கின்றன.
மன அழுத்தம்
ஒழுங்கற்ற
தூக்க முறைகள் மற்றும் சோசியல் ஜெட்லாக் ஆகியவை மன அழுத்தத்தை
அதிகரிக்கும் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். நாள்பட்ட மன அழுத்தம்
மற்றும் மனநலப் பிரச்னைகள் ஆகியவை நீரிழிவு குறைபாட்டிற்கு வழி வகுக்கும்.
குறிப்பு
இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது தனிப்பட்ட தேர்வாக இருக்கலாம். அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இந்த அபாயங்களைக் குறைக்க, ஆழ்ந்த தூக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை கையாள்வது அவசியமாகும்.