இன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் விநாயகர் ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி மதங்களைத் தாண்டி உலகின் பல்வேறு நாட்டு மக்களை இணைக்கிறது. இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருந்தும் விநாயகருக்கு ஏன் இந்த தனிச் சிறப்பு, விநாயகர் சதுர்த்தி தினம் எப்படி இவ்வளவு பிரபலமாகியது எனத் தெரிந்துகொள்வோம்.
பாரத சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரே வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா உருவாகக் காரணகர்த்தா.
மூத்த காங்கிரஸ் தலைவரான திலகர், ஓர் சுதந்திரப் போராட்டத் தியாகி. இவர் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர்.
![]()
|
திலகர் இந்து மதத்தின் மீது அதீத பற்று கொண்டிருந்தார். வெள்ளையர்கள் ஆட்சியின்போது வீட்டில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தியை ஒரு பொது ஊர்வல விழாவாக நடத்தத் திட்டமிட்டார்.
இதன்படி பிரம்மாண்ட விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்று ஆற்றிலும், கடலிலும் கரைக்கப்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தின்போது வாணவேடிக்கைகள் வெடிப்பது, டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிப்பது, மலர் தூவுவது, கேளிக்கை நடனம் ஆடுவது உள்ளிட்ட செயல்கள் மஹாராஷ்ட்ராவில் பிரபலமாகின.
திலகரின் இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் பின்னர் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவால் பின்பற்றப்பட்டது.
மஹா.,வில் சிவசேனா ஆட்சியின்போது விநாயகர் ஊர்வலம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு உலக மீடியாக்களின் கவனத்தைப் பெற்றது.
![]()
|
இன்று வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸி., சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
விநாயகரை வணங்கி படத்தை துவக்காத சினிமா தயாரிப்பாளர்கள் இல்லை. மாஸ் ஹீரோக்கள் பலர் பல மொழிப் படங்களில் விநாயகரை வணங்குவதுபோல காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
இன்று விநாயகருக்குப் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சீயம், அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்புகள் பல தயாரிக்கப்பட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
விநாயகர் சிலைகள் விற்பனை கடைகளில் சூடுபிடித்துள்ளது. களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க பலர் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.