வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேரு எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்பார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதற்கு நேரமில்லை. எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்யசபாவில் குற்றம் சாட்டி உள்ளார்.
பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று( செப்., 18ம் தேதி) துவங்கியது. பார்லிமென்டின் 75 ஆண்டு கால பயணம் குறித்து, முதல் நாளில் விவாதம் நடந்தது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் கார்கே பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை வழங்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டின் பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகாது. நீங்கள் மாற்ற விரும்பினால், இப்போது உள்ள நிலைமையை மாற்ற வேண்டும். இப்படி பெயரை மாற்றினால் என்ன நடக்கும்?. கொடுக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்.
உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், உங்கள் நாற்காலியை விட்டு விடுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் பயமுறுத்தினால் என்ன நடக்கும்?. உங்கள் ஆட்சியில் பெருமை கொள்கிறீர்கள். மக்களை கொடுமைப்படுத்துவதால் என்ன நடக்கும்?. இவ்வாறு பல்வேறு கேள்விகளை கார்கே எழுப்பினார்.
குற்றச்சாட்டு
மேலும், அவர் பேசியதாவது: நேரு எதிர்கட்சிகளின் பேச்சைக் கேட்பார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதற்கு நேரமில்லை. பிரதமர் மோடி பார்லிமென்டிற்குள் நுழைந்ததும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையை விட்டு வெளியேறினர். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார் ஏன்?.
இங்கிருந்து (பழைய பார்லி., கட்டடம்) அங்கு (புதிய பார்லி., கட்டடம்) சென்றால் என்ன மாறும். நீங்கள் உங்கள் (பாஜ.,) அரசியல் செய்யும் முறையை மாற்றுங்கள். பல தியாகங்கள் மற்றும் சிரமங்களுக்குப் பிறகு அரசியலமைப்பு உருவானது. மணிப்பூர் பற்றி எரிகிறது. இதுவரை அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. இவ்வாறு கார்கே பேசினார்.