விநாயகருக்கு அருகம்புல் படைக்கப்படுவது ஏன்? அனலாசுரனின் கதை
விநாயகருக்கு அருகம்புல் படைக்கப்படுவது ஏன்? அனலாசுரனின் கதை

விநாயகருக்கு அருகம்புல் படைக்கப்படுவது ஏன்? அனலாசுரனின் கதை

Updated : செப் 18, 2023 | Added : செப் 18, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவோர் ஏராளம். அருக மாலை, அருங்கம்புல் வழிபாட்டு முறை விநாயகருக்கு காலாகாலமாக ஏன் அளிக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் ஓர் ஆன்மிகக் கதை உண்டு. இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.புராண காலத்தில் அனலாசுரன் என்றொரு அரக்கன் இருந்தான். அவன் வாயிலிருந்து அடிக்கடி நெருப்பை கக்குவான்.
Vinayagar Chaturthi 2023: Why is Arugumbul created for Ganesha? The story of Analasura   விநாயகருக்கு அருகம்புல் படைக்கப்படுவது ஏன்? அனலாசுரனின் கதை

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவோர் ஏராளம். அருக மாலை, அருங்கம்புல் வழிபாட்டு முறை விநாயகருக்கு காலாகாலமாக ஏன் அளிக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் ஓர் ஆன்மிகக் கதை உண்டு. இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

புராண காலத்தில் அனலாசுரன் என்றொரு அரக்கன் இருந்தான். அவன் வாயிலிருந்து அடிக்கடி நெருப்பை கக்குவான். இதில் அத்தனை பொருட்களும் கருகி சாம்பலாகிவிடும். வயல்வெளி, வீடுகள், தானியக் கிடங்கு என்று எல்லா இடங்களிலும் நெருப்பை உமிழ்ந்து விளையாடினான் அனலாசுரன்.

இதனால் உணவுப் பொருட்கள், வீடுகளை இழந்த மக்கள், மிகவும் துன்புற்றனர். அனலாசுரன் மேல் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது எல்லாமே ஆவியாகிவிடும். அவனது நெருப்பு சக்தி அந்த அளவுக்கு வீரியம் உள்ளது.


latest tamil news


இந்திர தேவனின் வஜ்ஜிராயுதம், வெங்கடாஜலபதியின் சுதர்சன சக்கரம், சிவனின் திரிசூலம் ஆகிய எந்த ஆயுதங்களும் அனலாசுரனை எதுவும் செய்யாது. எனவே விநாயகர் அனலாசுரனோடு போரிடத் தயாராகினார்.

இருவரும் கடுமையாகப் போரிட்டனர். விநாயகர் ஏவிய அத்தனை ஆயுதங்களையும் நெருப்பைப் பயன்படுத்தி சாம்பலாக்கிவிட்டான் அனலாசுரன். இதனால் விநாயகர் அனலாசுரனை அப்படியே விழுங்கி விட்டார். அனலாசுரன் அழிந்து போனான்.

ஆனால் அவன் உடலில் இருந்த நெருப்பு விநாயகர் வயிற்றை எரிச்சலடையச் செய்தது. வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல் தவித்தார் விநாயகர். வருணன் மழையை அவர் மேல் பொழிவித்துக் குளிர வைக்க முயன்றான். முடியவில்லை.

இந்திரன் சந்தனம் கொண்டு வந்து பூசினான். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பி விட்டாள். தந்தை சிவன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பாம்பை மூத்த மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டினார். நிலவு அவரது தலையில் சேர்ந்தது. இவர்கள் அனைவரது முயற்சியும் தோற்றுப் போனது.


latest tamil news


இதனால் தேவர்கள் கஷ்யப முனிவரின் உதவியை நாடினர். 21 அருகம் புற்களை விநாயகரிடம் கொடுத்து உண்ணச் சொன்னார் முனிவர். அருகம்புல்லை சாப்பிட்டு எரிச்சல் முற்றிலுமாக மறைய, பரவசமாகினார் விநாயகர்.

அன்று முதல் தனக்கு அருகம்புல் மிகவும் உகந்தது என்றும், அதை சதுர்த்தி பூஜையில் சேர்த்துக் கொள்பவர்கள் வாழ்வில் நலமே நிறையும் என்றும் வரமருளினார். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி அன்று அருகம் புல்லை நாம் சமர்ப்பித்து வழிபடுகிறோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Nalla - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202313:12:53 IST Report Abuse
Nalla அப்பொழுதே விநாயகருக்கு வயிர்றேச்சல் பிடிக்காமல் இருந்து இருக்கிறது
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
19-செப்-202310:03:00 IST Report Abuse
N Annamalai அருகம்பு எளிதாக கிடைக்க கூடியது .அருமை அருமை அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X