பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு

Updated : செப் 18, 2023 | Added : செப் 18, 2023 | கருத்துகள் (289) | |
Advertisement
சென்னை: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென அறிவித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிமுக மற்றும் முன்னாள் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதை ஏற்க முடியாது என்றும், அவரை நாங்களும் தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் அதிமுக , பாஜ., கூட்டணி இல்லை என திடீரென அறிவித்துள்ளார்.இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசியதாவது :
 No alliance with BJP, ADMK: Jayakumar sudden announcement  பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு


சென்னை: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென அறிவித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிமுக மற்றும் முன்னாள் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதை ஏற்க முடியாது என்றும், அவரை நாங்களும் தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் அதிமுக , பாஜ., கூட்டணி இல்லை என திடீரென அறிவித்துள்ளார்.


இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசியதாவது :


அண்ணாமலையின் பேச்சால் தொண்டர்கள் உணர்ச்சியாக உள்ளனர். விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாது என்று டில்லியில் பா.ஜ., தலைமையிடம் சொல்லி இருக்கிறோம். முன்னாடி இருந்த தலைவர்கள் இருக்கும் போது பிரச்னை இருந்ததா? பழங்கால ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டியவர் அண்ணாமலை. அவர் தகுதி இல்லாத தலைவர், தலைக்கணம் இருப்பதால் இவ்வாறு நாங்கள் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கூட்டணியை பொருத்தவரை பாஜ.,வுடன் தற்போது இல்லை. தேர்தல் வரும்போது தான் முடிவு செய்வோம்.



மேலிடம் சொல்லித்தான் பேசுகிறாரா ?


அவரை அடக்கி வையுங்கள், அண்ணாதுரை, ஜெயலலிதா, குறித்து பேசுகிறார். கட்சியின் முன்னோடிகளை விமர்சிப்பதை ஏற்க முடியாது என மேலிடத்திடம் சொல்லியும் அவர் அடங்கவில்லை என்றால் மேலிடம் சொல்லித்தான் பேசுகிறாரா ? கூட்டணி உடைவதால் எங்களுக்கு இழப்பு இல்லை. இழப்பு பா.ஜ.,வுக்குத்தான். நோட்டோவை கூட பா.ஜ., நெருங்க முடியாது. பா.ஜ., வை ஏன் நாங்கள் சுமக்க வேண்டும் ? நாங்கள் எந்த வழக்கிற்கும் பயப்படவில்லை.


பா.ஜ.,வுக்கு காலே இல்லை, எப்படி தமிழகத்தில் கால் ஊன்ற முடியும் ? அண்ணாமலையின் பேச்சை அவரது கட்சிக்காரர்களே ரசிக்கவில்லை. தனியாக நின்று ஓட்டு வாங்கிட முடியுமா?



இது கட்சியின் முடிவு !


அதிமுக முன்னாள் தலைவர்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. ஏற்கனவே நாங்கள் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என எச்சரித்திருந்தோம். இப்போது மறுபரிசீலனை செய்தோம், கூட்டணி கிடையாது என முடிவு செய்துள்ளோம் . இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, கட்சியின் முடிவு. இவ்வாறு ஜெயக்குமார் அழுத்தமாக கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (289)

18-செப்-202323:50:16 IST Report Abuse
தேவதாஸ் புனே பிஜேபி யை எதிர்த்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் இது தான் உண்மை....சந்திரபாபு நாயுடு, நித்தீஷ் குமார் , அகாலி தளம், சத்ருகன் இன்னமும் நீளும்.....
Rate this:
Cancel
18-செப்-202323:38:28 IST Report Abuse
தேவதாஸ் புனே ஜெயக்குமார் திமுகவின் B டீம்......திமுக வை எதிர்க்க திராணி இல்லை. இவர் அண்ணாமலை யை எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறார் . எங்கே பிஜேபி தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்தது விடுமோ என்கிற பயம் ......பயம் வேண்டாம் ஜெயக்குமார்..... முதல் இடத்திற்கு பிஜேபி வரும்.....
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
18-செப்-202322:40:25 IST Report Abuse
M.Selvam அப்ப அடுத்து அதிமுக ஃபைல் வெளி வருமா? இல்லே எல்லாமே வெறும் பூச்சாண்டி தானா? ஏன்னா அம்புட்டு நேர்மை யாளர்கள் ரெண்டு கட்சிகளுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X