வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: "இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு பாஜ., உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது 26 கட்சிகள் ஒன்றிணைந்து "இண்டியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
இது தொடர்பாக, நிதிஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்தியில் உள்ள அரசு தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளது. அவர்கள் முன்கூட்டியே நடத்தட்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்து வருகிறோம். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்.
"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை. பீஹாரில் நாங்கள் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். நல்ல சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் அமைப்பதில் இருந்து, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செய்துள்ளோம். மக்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.