பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிந்தது!
பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிந்தது!

பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிந்தது!

Updated : செப் 20, 2023 | Added : செப் 18, 2023 | கருத்துகள் (180+ 285) | |
Advertisement
சென்னை, செப். 19- தமிழகத்தில், பா.ஜ., உடனான தற்போதைய கூட்டணியை, அ.தி.மு.க., திடீரென முறித்துக் கொண்டது. அண்ணாதுரை, ஜெயலலிதா, பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து, டில்லி மேலிடத்தின் உத்தரவுப்படியே, அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருவதாக புகார் கூறியுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ''தமிழகத்தில் பா.ஜ.,வால் காலுான்ற முடியாது,'' என்றார்.சென்னையில், நேற்று அவர்
BJP, ADMK alliance broke!  பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிந்தது!

சென்னை, செப். 19- தமிழகத்தில், பா.ஜ., உடனான தற்போதைய கூட்டணியை, அ.தி.மு.க., திடீரென முறித்துக் கொண்டது. அண்ணாதுரை, ஜெயலலிதா, பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து, டில்லி மேலிடத்தின் உத்தரவுப்படியே, அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருவதாக புகார் கூறியுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ''தமிழகத்தில் பா.ஜ.,வால் காலுான்ற முடியாது,'' என்றார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

ஜெயலலிதாவை விமர்சித்து, அண்ணாமலை பேசியதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் அண்ணாமலை, 'ஜெயலலிதாவை பெரிதும் மதிக்கிறேன்; நான் அப்படி கூறவில்லை' என்று மன்னிப்பு கேட்டார்.

அதைத் தொடர்ந்து, அண்ணாதுரை குறித்து பேசினார். அண்ணாதுரையை நாங்கள் தெய்வமாக போற்றுகிறோம். எங்கள் கட்சி, அவர் பெயரில் உள்ளது. அவரை சிறுமைப்படுத்தும் அளவுக்கு, அண்ணாமலை பேசினார்; அதற்கு கண்டனம் தெரிவித்தோம்.

அதன் பின்னரும் திருந்தாமல், 'ஈ.வெ.ரா., அடி வாங்கியதைக் கூறுவேன்; அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எப்படி பதவி வாங்கினார் என்பது தெரியும்' என, கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். இதை, தன்மானமுள்ள அ.தி.மு.க., தொண்டன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

சிட்டுக் குருவிக்கு பட்டம் கட்டினால், அது, திமிர் பிடித்து ஆடும்; வீட்டில் உள்ள பாத்திரங்களை கொத்தும். அது, சிட்டுக் குருவிக்கு உள்ள புத்தி. அதுபோல, அண்ணாமலை தகுதிக்கு மீறிய பதவி. ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தபோது, எதற்கு விருப்ப ஓய்வில் சென்றார் என்று தெரியவில்லை; அங்கு கிளறினால் தான் தெரியும்.

அரசியல் தலைவருக்கோ, பா.ஜ., தலைவருக்கோ லாயக்கில்லாதவர். தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் அண்ணாமலை செயல்படுகிறார்.

அ.தி.மு.க., என்பது சிங்கக் கூட்டம். அந்த சிங்கக் கூட்டத்தை பார்த்து, சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது. வேண்டுமானால் தனியாக நிற்கட்டும். 'நோட்டா'வுக்கு கீழே அண்ணாமலை ஓட்டு வாங்குவார்.

அப்படி இருக்கிறது உங்கள் செல்வாக்கு. உங்களுக்கு ஈ.வெ.ரா.,ஜெயலலிதா, பழனிசாமி குறித்து பேச தகுதி கிடையாது. இனி, அண்ணாமலையை கடுமையாக விமர்சிப்போம். ஒரு கருத்து கூறினால், ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்தும், அவரின் சிறு புத்தி குறித்தும் பதிலடி தரப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால், 'அவரை திருத்துங்கள்' என்று மேலிடத்தில் கூறினோம். 'அப்டியெல்லாம் பேச வேண்டாம் என, அவரிடம் கூறுங்கள்' என்றோம். பா.ஜ., தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியை விரும்புகின்றனர். ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை.


எச்சரிக்கை


கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவர்களை சுமக்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு கால் கிடையாது; ஒரு காலத்திலும் பா.ஜ.,வால் கால் ஊன்ற முடியாது.

எங்களை வைத்து தான் அவர்களுக்கு அடையாளம். அப்படி இருக்கும் நிலையில், விமர்சனங்களை ஏற்க முடியாது. பல முறை எச்சரித்தும், அவர் திரும்ப திரும்ப பேசியதால், கூட்டணியை முறிக்கிறோம்; அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இல்லை.இதுதான் எங்கள் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்தல்ல; கட்சியின் கருத்து. அண்ணாமலை தேவை இல்லாமல், பழைய பிரச்னைகளை கிளறுகிறார். இவர் தொல்லியல் துறையில் இருக்க வேண்டியவர். மாநில தலைவராக இருக்க தகுதி இல்லாதவர்.


தேர்தல் நேரத்தில் கூட்டணி


அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது பா.ஜ., இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாததால், எங்களுக்கு இழப்பு இல்லை; அவர்களுக்கு தான் இழப்பு. பா.ஜ., எங்களுக்கு தேவையில்லாத சுமை. அண்ணாமலை பேச்சை, அவரது கட்சியினரே ரசிக்கவில்லை. மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி விட்டு, தனித்து செயல்பட்டார். எந்த பூச்சாண்டிக்கும், அ.தி.மு.க., பயப்படாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது நிறைய கட்சிகள், எங்கள் கூட்டணிக்கு வரும். அ.தி.மு.க., தலைமையில், மெகா கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


'நன்றி மீண்டும் வராதீர்கள்!'



அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், பா.ஜ., உடன் இனி கூட்டணி வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என்ற 'ஹேஸ்டேக்' உருவாக்கி, பா.ஜ.,வுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். அதற்கு பதிலடியாக, பா.ஜ.,வினரும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (180+ 285)

முத்து    மாணிக்கம்          திருத்தணி ஜெயலலிதா அம்மாவுக்கு துரோகம் செய்த கூட்டம் தான் இப்போது உள்ள அதிமுக
Rate this:
Cancel
கணேசன்        விழுப்புரம் இங்குள்ள மிஷனரி களுக்கு பிஜேபி வரகூடாது என்ற கொள்கை || அது தவிர வேறு இல்லை
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). நல்ல முடிவு இரண்டு கட்சிகளும்.2). ஆளுமை இல்லாத தலைவர்களை எவரும் விரும்பமாட்டார்.3). NEED BOSS AND BOSS IS BOSS ALWAYS . THATS OUR ANNAMALAI. OUR GREAT LEADER 4). எடப்பாடி போன தேர்தலில் செய்த தவறை செய்கிறார்.5). எல்லா கிராமங்களிலும் இளைஞர்கள் அண்ணாமலை வசம் உள்ளனர்.6). தற்பொழுது 60 இளைஞர்கள் உள்ள உலகம் இந்தியா.7). அண்ணாமலை அதாவது பிஜேபி கூட்டணி அதிமுக இல்லாமல் போட்டியிட்டாலும் 15 to 18 எம்பி தொகுதிகளை கைப்பற்றும்.8). எதிர்கட்சிக்கு வாயில் விரல் வைக்கலாம்.தேர்தல் முடிவுக்கு பின்னர்.9). வரும் 2026 தேர்தல் பிஜேபிக்கு வசப்படுத்தும் 60:to 70 சீட்டுகள்.10). துரத்தி அடிப்போம் திராவிடத்தை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X