காப்பீடு இல்லாவிட்டாலும் ஆப்பரேஷன்; பரிந்துரை அளிக்கிறது மேம்பாட்டு குழு
காப்பீடு இல்லாவிட்டாலும் ஆப்பரேஷன்; பரிந்துரை அளிக்கிறது மேம்பாட்டு குழு

எக்ஸ்குளுசிவ் செய்தி

காப்பீடு இல்லாவிட்டாலும் ஆப்பரேஷன்; பரிந்துரை அளிக்கிறது மேம்பாட்டு குழு

Added : செப் 19, 2023 | |
Advertisement
'காப்பீட்டு அட்டை இல்லாவிட்டாலும், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு, தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும்' என, மேம்பாட்டுக்குழு பரிந்துரை அளிக்க உள்ளது.தமிழகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 2009ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் துவங்கப் பட்டதன் நோக்கம் திசைமாறி விட்டதாகவும், காப்பீட்டு அட்டை இல்லை என அரசு மருத்துவமனை களில் கூட, நோயாளிகளை
CM Medical Insurance: Operation even without insurance; Recommendations are made by the Development Committee   காப்பீடு இல்லாவிட்டாலும் ஆப்பரேஷன்; பரிந்துரை அளிக்கிறது மேம்பாட்டு குழு

'காப்பீட்டு அட்டை இல்லாவிட்டாலும், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு, தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும்' என, மேம்பாட்டுக்குழு பரிந்துரை அளிக்க உள்ளது.

தமிழகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 2009ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் துவங்கப் பட்டதன் நோக்கம் திசைமாறி விட்டதாகவும், காப்பீட்டு அட்டை இல்லை என அரசு மருத்துவமனை களில் கூட, நோயாளிகளை அலையவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, மேம்படுத்தும் வகையில், தேசிய சுகாதார திட்ட அமைப்பின் வள மைய முன்னாள் நிர்வாக இயக்குனர், டாக்டர் சுந்தரராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழுவில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநில திட்டக் குழு உறுப்பினர் அமலோற்பவநாதன், டாக்டர்கள் முகமது ரேலா, அரவிந்தன் உள்ளிட்ட ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.

அக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது: ஆண்டுக்கு, 1.20 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள குடும்பத்திற்கு தான், காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி, 1.43 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. காப்பீடு அட்டை இல்லாதோரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

அறுவை சிகிச்சை போன்ற அவசர நிலைகளில், அவர்களுக்கு காப்பீடு கட்டாயம் எனக்கூறி, அட்டை வாங்கி வரும்படி, கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பும் நிலை உள்ளது.

அவசரம் கருதி, ஓரிரு நாட்களில் காப்பீட்டு அட்டை கிடைக்கிறது. அதேநேரம், அரசு மருத்துவமனைகளில் ஏன் மருத்துவ காப்பீட்டு திட்டம் கட்டாயம் என்ற கேள்வியும் எழுகிறது.

பணம் இல்லாதவர்கள் தான், அரசு மருத்துவமனை களில் சேர்கின்றனர். அவர்களிடம் காப்பீடு அட்டை இல்லை என, கடைசி நேரத்தில் அலைய விடுவது தேவையற்ற ஒன்று.

எனவே, அரசு மருத்துவமனைகளில் சேருவோருக்கு, காப்பீடு அட்டை இல்லை என்றாலும், ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* முதல்வர் காப்பீட்டு திட்டத்தை, யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் தான் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு, 1,546 கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, 7,730 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது

* காப்பீட்டு திட்டத்தில், 853 அரசு மருத்துவ மனைகள்; 969 தனியார் மருத்துவமனைகள் என, 1,822 மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X