20 சுங்கத்துறை அதிகாரிகள்  கூண்டோடு அதிரடி மாற்றம்
20 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு அதிரடி மாற்றம்

20 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு அதிரடி மாற்றம்

Updated : செப் 20, 2023 | Added : செப் 20, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: ஓமன் நாட்டில் இருந்து கடந்த வாரம் வந்த விமானத்தில் கடத்தல், 'குருவி' யாக வந்த, 113 பேர் கைது செய்யப்பட்டு, 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த, 20 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இம்மாதம், 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஓமன்
 20 Customs officers caged with drastic change  20 சுங்கத்துறை அதிகாரிகள்  கூண்டோடு அதிரடி மாற்றம்

சென்னை: ஓமன் நாட்டில் இருந்து கடந்த வாரம் வந்த விமானத்தில் கடத்தல், 'குருவி' யாக வந்த, 113 பேர் கைது செய்யப்பட்டு, 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த, 20 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இம்மாதம், 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து வரும் ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெரிய அளவில் கடத்தல் பொருட்கள் வருவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


latest tamil news


இதையடுத்து தனிப்படையினர், விமான நிலையத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் சோதனை நடத்தி, 113 பயணியரிடம் இருந்து, 13 கிலோ தங்கம், 120 ஐ போன்கள் உட்பட, 204 மொபைல் போன்கள், லேப்டாப்கள், சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ உள்ளிட்ட கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு, 14 கோடி ரூபாய்.

இதையடுத்து, கடத்தல் 'குருவி'களாக செயல்பட்ட, 113 பேர் மீதும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில், சென்னை விமான நிலையத்தில், பணியில் உள்ள சிலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், 14ம் தேதி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் பணியில் இருந்த, சூப்பிரண்ட்டுகள் 4 பேர், இன்ஸ்பெக்டர்கள் 16 பேர் என மொத்தம், 20 பேர், ஒட்டு மொத்தமாக தலைமை அலுவலகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த அதிரடி மாற்றம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

20-செப்-202315:02:38 IST Report Abuse
S SRINIVASAN very good action they shd put in all small small airports in remote area of the country or give them show case notice
Rate this:
Cancel
Raj -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-202313:31:53 IST Report Abuse
Raj 113 பயணிகள் 13 கிலோ தங்கம் மட்டும் தான். 113.. 13 அங்கயே நம்பர் இடிக்குது. பாவம் இவர்கள் மிக சிறிய சம்பளத்தில் வேல செய்யும் ஆட்கள் குருவி யா வேல செய்றவங்க இவர்கள ஏமாற்றி கொஞ்சம் காசுக்கு இவர்களை குருவிகள் aa anupi இருக்கிறார்கள்.இது வெறும் கண் துடைப்பு இவர்கள தூண்டில் புழு aa போட்டு tu வேர ஒரு கூட்டம் அதே flight la பெரிய சுறா திமிங்கலம் எடுத்துட்டு போய் iruka chances இருக்கு. எல்லோரும் கூட்டு கனவான்கள்.. தொழில் முறை போட்டி.. பாவம் அந்த குருவிகள்..
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
20-செப்-202311:42:42 IST Report Abuse
Nellai tamilan வருடாவருடம் இவர்களிடம் சொத்துக்கள் உறுதிமொழி கையெழுத்திட்டு தாக்கல் செய்ய சொல்லவேண்டும். அந்த உறுதிமொழியை சொல்லப்படாத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X