''தனியாருக்கு தாரைவார்க்க ரகசியமா, 'பைல்'கள் தயாராகுது வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்தத் துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல கூட்டுறவுத் துறை சார்புல, மிகவும் பழமையான அமராவதி, ஆம்பூர், திருத்தணி, மோகனுார் சர்க்கரை ஆலைகள் இருக்கு... 'பழமையான இந்த ஆலைகளை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கணும்'னு, விவசாயிகளும், ஆலைகளின் தொழிலாளர்களும் வலியுறுத்திட்டு இருக்காவ வே...
![]()
|
''இதுல, அமராவதி, மோகனுார் சர்க்கரை ஆலைகள்ல, எத்தனால் உற்பத்தி நிலையங்கள் இருக்கு... அரசுக்கு வருவாய் அளிக்கக் கூடிய இந்த ஆலைகளை, 30 வருஷம் தனியாருக்கு குத்தகைக்கு வழங்க, ரகசியமா பைல்கள் தயாராகிட்டு இருக்கு... இதைக் கேள்விப்பட்டு, விவசாயிகளும், தொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆயத்தமாகிட்டு இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement