ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா?
ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா?

ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா?

Added : செப் 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(செப்.,28) நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது
Ahead of Indian Foreign Minister S Jaishankar-Anthony Blinken Meet, US Says Canada Stand Made Clearஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(செப்.,28) நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் இவர்களது சந்திப்பு நடக்க உள்ளது. இது பற்றி, அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, இரு தலைவர்கள் இடையேயான விவாதம் பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது என மறுத்து விட்டார்.


மேலும், அவர் கூறியதாவது: நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். கனடா விசாரணைக்கு ஒத்துழைக்க அவர்களை ஊக்குவித்துள்ளோம், மேலும் ஒத்துழைக்க அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். கனடாவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என மறுத்ததுடன், நிஜ்ஜார் படுகொலையில் குறிப்பிட்ட தகவலை வழங்கினால், அதுபற்றி இந்தியா விசாரணை மேற்கொள்ளும். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-செப்-202317:12:37 IST Report Abuse
Kasimani Baskaran 9/11 க்கு பிறகும் காலிஸ்தானிகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போலத்தான்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-செப்-202314:26:11 IST Report Abuse
வெகுளி இரு நாட்டு உறவை பேணுவதில் அமெரிக்காவும் இந்தியாவும் பொறுப்பாக நடந்துகொள்வது பாராட்டத்தக்கது...
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் கனடாவிடம் எந்த ஆதாரத்தையும் இதுவரை இல்லை. ஜஸ்டின் ட்ரூட்டோ தனது அரசியல் நோக்கத்திற்காக வெறும் வாயால் வடை சுட்டுகிறார்.ஆனால் இதற்க்கு இந்தியாவிற்கு பலன் கிடைக்கும். எல்லா நாடுகளிலும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது விட்டார்கள். இந்தியாவும் தான்.நல்ல விஷயம் நடக்கிறது.1). ஜெய்சங்கர் பாஸ் வழக்கம் போல் டிப்ளமேட்டிக்காக ஸ்ட்ராங்கா நமது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டு வாங்க. 2). ஜெய்சங்கர் சார் நாங்க எல்லாம் உங்களுடைய தீவிர ரசிகர்கள். 3). தற்பொழுது எல்லா குடும்பங்களிலும் UPSC EXAM படிக்க தங்களது குழந்தைகளுக்கு என்கரேஜ் பண்ணாருங்க. 3).காரணம் ஜெய்சங்கர் சார், அண்ணாமலை ஜி மற்றும் நமது கவர்னர் ஆர்.என். ரவி போன்ற உங்களை பார்த்துதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X