ராஞ்சியில் தோனிக்கு உற்சாக வரவேற்பு

Updated : ஜூலை 08, 2010 | Added : ஜூலை 07, 2010 | கருத்துகள் (11) | |
Advertisement
ராஞ்சி : தோனி-சாக்ஷி புதுமண தம்பதிக்கு சொந்த ஊரான ராஞ்சியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). இவர்களது திருமணம் உத்தரகண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது. அவசரமாக திருமணம் முடித்து கொண்டதற்கு ஜோதிடர்கள் கூறிய ஆலோசனையே காரணம் என கூறப்பட்டது. ராஞ்சி வருகை:
ராஞ்சி,தோனி,வரவேற்பு, Dhoni, reach, Ranchi

ராஞ்சி : தோனி-சாக்ஷி புதுமண தம்பதிக்கு சொந்த ஊரான ராஞ்சியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). இவர்களது திருமணம் உத்தரகண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது. அவசரமாக திருமணம் முடித்து கொண்டதற்கு ஜோதிடர்கள் கூறிய ஆலோசனையே காரணம் என கூறப்பட்டது.


ராஞ்சி வருகை: திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் தோனி, சாக்ஷி ஜோடி நேற்று காலை சொந்த ஊரான ராஞ்சி திரும்பியது. நேற்று தோனி தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடினார். தோனிக்கு திருமண மற்றும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ராஞ்சி விமானநிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால், வழக்கம் போல மீடியாவை புறக்கணித்த தோனி, காரில் வெளியேறினார். இதனால் மீடியா உட்பட பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.


பிறந்தநாள்: ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டருகே அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதல் காத்திருந்தனர். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு "கேக்' வெட்டிக் கொண்டினர். தனது வீட்டின் பால்கனியில் மனைவி சாக்ஷியுடன் இணைந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் தோனி. இது குறித்து தோனியின் தீவிர ரசிகரான அடுல் என்பவர் கூறுகையில்,"" இன்று எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி. நான்கு நாட்களுக்கு முன் தோனி திருமணம் செய்து கொண்டார். இன்று அவரது பிறந்த நாள். இரண்டையும் சேர்த்து கொண்டாடுகிறோம்,'' என்றார்.


பலத்த பாதுகாப்பு: தோனி ராஞ்சி வருவதை ஒட்டி, பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் ராஜிவ் ராஜன் கூறுகையில்,"" தோனி வருவதை ஒட்டி, உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. ஏராளமான பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.


நியூசி., அழைப்பு: தோனி-சாக்ஷி தம்பதியினர் தேனிலவுக்கு எந்த இடத்துக்கு செல்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனிலவுக்கு குயின்ஸ்டவுன் வருமாறு, நியூசிலாந்து சுற்றுலா வளர்ச்சித் துறை தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இதன் தலைமை நிர்வாகி டோனி எவரிட் கூறுகையில், "" தோனி-சாக்ஷி ஜோடியை தேனிலவுக்காக குயின்ஸ்டவுன் அழைப்பதில் பெருமை கொள்கிறோம். தேனிலவு கொண்டாட அவர்களுக்கு இது சரியான இடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார். கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தேனிலவுக்கு நியூசிலாந்து மிகச்சரியான இடம் என்று தோனியும் கூறியிருக்கிறார். இதனால் தோனி-சாக்ஷி ஜோடி நியூசிலாந்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

R gopalan - Nairobi,கென்யா
08-ஜூலை-201021:43:55 IST Report Abuse
R gopalan when ms was doing X standard, she might have done 3rd standard. is it school mate...
Rate this:
Cancel
ilango - Karur,இந்தியா
08-ஜூலை-201021:00:09 IST Report Abuse
ilango dhonikku nal vaalththukkal
Rate this:
Cancel
RAJU - DAMMAM,இந்தியா
08-ஜூலை-201015:10:32 IST Report Abuse
RAJU வேல்முருகன் விளையாட்டு பக்ககம் படிப்பது இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X