கோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.,

Updated : ஜூலை 09, 2010 | Added : ஜூலை 07, 2010 | கருத்துகள் (67) | |
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த ஜெ., தோழி சசிகலாவுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட ஜெ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர்
கோடநாடு,சென்னை,ஜெ.,Jayalalitha,return,kodanad

கோத்தகிரி : கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த ஜெ., தோழி சசிகலாவுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட ஜெ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், குன்னூர் தொகுதி செயலர் மாதன், ஊட்டி நகர செயலர் தேவராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் வினோத், ஜெ., மாவட்ட முன்னாள் பேரவை செயலர் மணி, குன்னூர் ஒன்றிய செயலர் கலைச்செல்வன், ஊட்டி நகராட்சி கவுன்சிலர் இம்தியாஸ், ஊட்டி சட்டசபை தொகுதி செயலர் பாபு உட்பட நிர்வாகிகள் வழியனுப்பினர்.


ஹெலிகாப்டரில் சென்றார்: நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், இவரை அழைத்து செல்ல வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இரு முறை சுற்றி வந்து தரையிறக்கப்பட்டது. ஜெ., ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் செல்லக்கூடும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் வானம் தெளிவானதால், ஜெ., தோழி சசிகலா, ஹெலிகாப்டரில் கோவைக்கு சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பினார்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (67)

திருஞானம் - jurongeast,சிங்கப்பூர்
10-ஜூலை-201023:05:10 IST Report Abuse
திருஞானம் நான் கடந்த பத்து வருடங்களாக தினமலர் படித்து வருகிறேன். மிகவும் சிறப்பு வாய்ந்த நாளிதழ் இது மட்டும் தான்.
Rate this:
Cancel
சிவசங்கரன் - CA,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201002:17:06 IST Report Abuse
சிவசங்கரன் ஜப்பானில் மிக பெரிய செமி கண்டக்டர் தயாரிப்பு கம்பனி யின் தலைமை நிர்வாகி, தான் மிக சிறிய வீட்டில் வசிப்பதாகவும் அலுவலகத்துக்கு தினமும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் செல்வதாகவும் இதில் தனக்கு எந்த சிரமமும் அவமானமும் இல்லை என்றும் சமீபத்தில் கூறி உள்ளார். அரசாங்க செலவில் 200 போலீஸ் அதிகாரிகள் காவலர்கள் என காவலுக்கு வைத்துக்கொண்டு நாட்டின் மகராணி போல ஆடம்பரமாக வாழ்ந்து நாட்டை கொள்ளை அடிப்பவர்களை நம் மக்கள் தூக்கி ஏறியப்போவதும் இல்லை நாம் ஜப்பானைப்போல் முன்னேறப்போவதும் இல்லை.
Rate this:
Cancel
பு.செல்லதுரை. - kanarpatti.thirunelveli,இந்தியா
09-ஜூலை-201002:15:02 IST Report Abuse
பு.செல்லதுரை. ஜெயலலிதா கூட சசிகலா வரவில்லையா. ஹெலிகாப்டரில் இடம் இல்லையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X