ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE