சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிற்சாலை கழிவுகள்: 4 பசுக்கள் பலி

Updated : நவ 10, 2011 | Added : நவ 10, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலையின் உணவு கழிவுகள் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் குவிக்கப்பட்டதால், அதனை மேய்ந்த 4 பசுக்கள் பரிதாபமாக பலியாகின. மேலும் ஒரு மாடு கவலைக்கிடமான நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. அங்கு தனியார் டயர்
4 Cow dead near Tiruvalloore,தொழிற்சாலை கழிவுகள்: 4 பசுக்கள் பலி

கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலையின் உணவு கழிவுகள் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் குவிக்கப்பட்டதால், அதனை மேய்ந்த 4 பசுக்கள் பரிதாபமாக பலியாகின. மேலும் ஒரு மாடு கவலைக்கிடமான நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. அங்கு தனியார் டயர் தொழிற்சாலை ஒன்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அந்த தொழிற்சாலையின் உணவு கழிவுகள் டிராக்டர் மூலம் அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தில், வனத்துறையினருக்கு சொந்தமான காப்பு காட்டில் கொட்டி குவிக்கப்பட்டது.


அக்கிராமத்தின் கால்நடைகள் அந்த காப்பு காட்டில் மேய்வது வழக்கம். குவிக்கப்பட்ட உணவு கழிவுகளை மாடுகள் மேய்ந்ததால் அவற்றிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ரகு, பலராமன், ரமேஷ், சின்னிகான் ஆகியோரின் ஐந்து பசுக்கள் பாதிப்புக்குள்ளானது.


தகவல் அறிந்த பூவலம்பேடு கால்நடை உதவி மருத்துவர் பூங்குழலி தலைமையிலான மருத்துவ குழுவினர், கண்ணன்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பசுக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதில் சிகிச்சை பலனின்றி ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பசுக்கள் பரிதாபமாக இறந்தன.ஒன்று மட்டும் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பசுக்களை சென்னை சைதாப்பேட்டை கால்நடை பராமரிப்பு புலனாய்வு பிரிவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அடுத்தடுத்து பசுக்கள் பலியானதால் கண்ணன்கோட்டை கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் எப்படி குவித்தனர் என்று கும்மிப்பூண்டி தாசிதார் ராமபிரானிடம் கேட்டபோது, " சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டக்கு தகவல் தெரிவித்துள்ளோம், உரிய விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.இதுகுறித்து சம்மந்தப்பட்ட தனியார் டயர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது, "எங்களின் அனைத்து சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், எங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி கழிவுகளை அதற்கென ஒதுக்கியுள்ள பகுதிகளில் மட்டுமே குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் முறையாக பின்பற்றாமல் இருக்காலம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் இந்த பொருத்தமற்ற நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நிறுவனம் கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்' என்று கூறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mano - chennai,இந்தியா
10-நவ-201120:10:11 IST Report Abuse
mano அட பாவிகளா 4 மனுஷன் சாகலாம் ஆன 4 பசு எப்படி சாகலாம் !!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X