தமிழ்நாடு

ராமநாதபுரம் அருகே மயான வசதியில்லை பிணங்கள் ரோட்டோரத்தில் புதைப்பு

Added : நவ 14, 2011
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தெற்கு தரவை கிராமத்தில் மயான வசதியில்லை. இதனால் இறந்தவர்களை ரோட்டோரத்தில் புதைக்கின்றனர். தெற்குதரவை கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த 85 குடும்பத்தினர் உள்ளனர். இங்கு மயான வசதி கிடையாது. யாராவது இறந்தால் சொந்த இடம் இருந்தால் அங்கேயும், அல்லது உறவினர் இடங்களிலும் அடக்கம் செய்து வருகின்றனர். அப்படியும் இடம் இல்லாதவர்கள், ரோட்டு ஓரத்தில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தெற்கு தரவை கிராமத்தில் மயான வசதியில்லை. இதனால் இறந்தவர்களை ரோட்டோரத்தில் புதைக்கின்றனர். தெற்குதரவை கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த 85 குடும்பத்தினர் உள்ளனர். இங்கு மயான வசதி கிடையாது. யாராவது இறந்தால் சொந்த இடம் இருந்தால் அங்கேயும், அல்லது உறவினர் இடங்களிலும் அடக்கம் செய்து வருகின்றனர். அப்படியும் இடம் இல்லாதவர்கள், ரோட்டு ஓரத்தில் புதைத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதியில் வாழும் பிற சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மயானம் வேண்டி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். ஊர் தலைவர் ராமன் கூறியதாவது: மயானம் வேண்டி போராடி வருகிறோம். அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும், சமாளித்துக் கொள்வோம். பிணங்களை புதைக்க இடம் இல்லை என்றால், எங்கே போவது. இதனால் ஊருக்குள் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தை மயானத்திற்கு ஒதுக்கி தருமாறு கலெக்டர் அருண்ராயிடம் கோரியுள்ளோம், என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X