தமிழ்நாடு

மதுவிற்கு அடிமையாகும் சிறுவர்கள் : விற்பனையை எதிர்க்கும் பெண்கள்

Added : நவ 14, 2011
Share
Advertisement
சிவகங்கை : கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவால் சிறுவர்கள் சீரழிந்து வருவதாக கூறி பெண்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு அனுமதித்துள்ள மதுக்கடைகள் தவிர பிற இடங்களில் மொத்தமாகவோ, சில்லரையாகவோ மதுவை விற்பனை செய்யக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் மதுக்கடைகள் இல்லாத இடங்களில்,வேறு இடங்களில் இருந்து மொத்தமாக மதுவை கொள்முதல் செய்து, அவற்றை

சிவகங்கை : கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவால் சிறுவர்கள் சீரழிந்து வருவதாக கூறி பெண்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு அனுமதித்துள்ள மதுக்கடைகள் தவிர பிற இடங்களில் மொத்தமாகவோ, சில்லரையாகவோ மதுவை விற்பனை செய்யக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் மதுக்கடைகள் இல்லாத இடங்களில்,வேறு இடங்களில் இருந்து மொத்தமாக மதுவை கொள்முதல் செய்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தாலும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆலம்பச்சேரி மஞ்சுளா கூறியதாவது: மானாமதுரையை அடுத்த கே.புதுப்பட்டி, மேலாயூரில் டாஸ்மாக் கடை உள்ளது. எங்கள் கிராமத்தில் சிலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி பெட்டி கடை,வீடுகளில் வைத்து கள்ளத்தனமாக விற்கின்றனர்.


சீரழியும் சிறுவர்கள்: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். சிறுவர்கள்,வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து வந்து இதுபோன்று விற்பவர்களிடம் வாங்கி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகின்றனர். என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X