ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் யாத்திரை

Updated : ஜூலை 08, 2010 | Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (2)
Advertisement
ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ‌ரெட்டி சர்ச்சைக்குரிய யாத்திரையை மீண்டும் துவங்கினார். கட்சி மேலிடம் அனுமதி அளிக்காத போதும் ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரையை தொடங்கியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் யாத்திரைக்கு காங்., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தரக் கூடாது என ஆந்திர முதல்வர் ரோசய்யா

ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ‌ரெட்டி சர்ச்சைக்குரிய யாத்திரையை மீண்டும் துவங்கினார். கட்சி மேலிடம் அனுமதி அளிக்காத போதும் ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரையை தொடங்கியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் யாத்திரைக்கு காங்., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தரக் கூடாது என ஆந்திர முதல்வர் ரோசய்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பி‌டத்தக்கது . ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது , ஆந்திராவில் 80க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் இறந்தனர். அப்படி இறந்தவர்களின் குடும்ப‌த்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ‌ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரை மேற்கொண்டார். அப்போது பெரும் கலவரம் ஏற்பட்டதால், கட்சி மேலிடம் யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்டது. பாதிக்கப்பட்டவர்களை ஒரே இடத்துக்கு வரச் சொல்லி ஆறுதல் கூறுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. டில்லி சென்று வீரப்ப மொய்லியை சந்தித்தார் ஜெகன். ‌இந்நிலையில் கட்சி மேலிட உத்தரவை மீறி ஜெகன் மோகன் ‌மீண்டும் இன்று யாத்திரையை ஸ்ரீகாகுளத்தில் இருந்து துவங்கிள்ளார். செகுந்திராபாத்தில் இருந்து ரயிலில் ஸ்ரீகாகுளம் வந்த ஜெகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். யாத்திரை நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Maulee - Madurai,இந்தியா
08-ஜூலை-201013:34:46 IST Report Abuse
K Maulee தம்பிக்கு ரொம்ப ரொம்ப அவசரம்போல. குறைகுடம் ரொம்பவே தளும்புது.
Rate this:
Cancel
RAMJEE - BANGALORE,இந்தியா
08-ஜூலை-201011:49:17 IST Report Abuse
RAMJEE முதல்வர் பதவி கொடுக்க வேண்டாம் .. துணை முதலமைச்சர் பொறுப்பாவது வழங்க வேன்டாமா ?? எவ்வளவு காலம் தான் பொறுப்பார் ஜெகன் .. களத்தில் இறங்கிவிட்டார் ஒய்.எஸ். ஆர். வாரிசு !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X