4. இந்த ஊரின் முதல் பள்ளி...?

Added : நவ 26, 2011 | |
Advertisement
இன்று கோவையில் தடுக்கி விழுந்த இடத்தில் கூட ஒரு பள்ளிக் கூடத்தை பார்க்க முடியும். அந்தளவுக்கு அரசுப் பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு பெருகி விட்டன. மைக்கேல் மேல்நிலைப் பள்ளி, சர்வஜனா மேல்நிலைப்பள்ளி போன்ற "செஞ்சுரி' போட்ட தரமான பள்ளிகளில் படித்த பலர் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.அது சரி... கோவையின் முதல் பள்ளி எது தெரியுமா? மரக்கடை ரோட்டில்
4. இந்த ஊரின் முதல் பள்ளி...?

இன்று கோவையில் தடுக்கி விழுந்த இடத்தில் கூட ஒரு பள்ளிக் கூடத்தை பார்க்க முடியும். அந்தளவுக்கு அரசுப் பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு பெருகி விட்டன. மைக்கேல் மேல்நிலைப் பள்ளி, சர்வஜனா மேல்நிலைப்பள்ளி போன்ற "செஞ்சுரி' போட்ட தரமான பள்ளிகளில் படித்த பலர் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
அது சரி... கோவையின் முதல் பள்ளி எது தெரியுமா? மரக்கடை ரோட்டில் உ<ள்ள சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளிதான் அந்த பெருமைக்குரிய பள்ளி. கோவையின் கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் மற்றும் ஆடிஸ் பாதிரியார் முயற்சியால் 1831ல் இப்பள்ளி துவங்கப்பட்டது.
முதலில் லண்டன் மிஷன் சொசைட்டியின் "வெர்னாகுலர் ஸ்கூல்' என அறியப்பட்ட இப்பள்ளி, பின்னர் லண்டன் மிஷன் பள்ளியாக மாறியது. மாவட்டம் முழுவதும் துவங்கப்பட்ட லண்டன் மிஷன் பள்ளிகள், 1947ல் சி.எஸ்.ஐ. பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
கொள்ளேகால் வரை கோவை: கோவை, ஒரு காலத்தில் பரந்து விரிந்த மாவட்டமாக இருந்தது. இப்போதைய கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருக்கும் கொள்ளேகால் முதல், கரூர் மாவட்டம் வரை, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. இப்போது தனி மாவட்டமாக இருக்கும் நீலகிரி, 1868ம் ஆண்டில்தான் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை ஆகியவை, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட தாலுகாக்களாக இருந்தன. மாநில மறுசீரமைப்பின்படி, 1956ல் கொள்ளேகால் தாலுகா முழுவதும், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது. கரூர் தாலுகா, திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இப்போது கரூர், தனி மாவட்டத்தின் தலைநகராகவுள்ளது. பிற்காலத்தில் பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979ல் உருவான ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009 பிப்ரவரியில், திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து, திருப்பூரை தலைமையிடமாக கொண்ட மாவட்டம் உருவாக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

Alexander - coimbatore,இந்தியா
31-அக்-201213:47:34 IST Report Abuse
Alexander கோயம்புத்தூர் பெஸ்ட் city
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394